வீடு / சமையல் குறிப்பு / டிரைகலர் குடைமிளகாய் ரைஸ்

Photo of Tricolour capsicum rice by Krishnasamy Vidya Valli at BetterButter
848
3
0.0(0)
0

டிரைகலர் குடைமிளகாய் ரைஸ்

Nov-22-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டிரைகலர் குடைமிளகாய் ரைஸ் செய்முறை பற்றி

சிவப்பு மஞ்சள் மற்றும் பச்சை குடைமிளகாய் கொண்டு செய்யப்படுவது இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி - 1 கப்
  2. குடைமிளகாய் நீளவாக்கில் நறுக்கியது - 3 நிறங்களிலும் சேர்த்து 1 கப்
  3. வெங்காயம்-1
  4. பச்ச மிளகாய் - 1
  5. முந்திரி பருப்பு - 10
  6. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  7. பட்டை - 1 சிறிய துண்டு
  8. கிராம்பு - 2
  9. ஏலக்காய் -3
  10. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  11. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  12. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  13. உப்பு - 3 / 4 தேக்கரண்டி
  14. ஆம்சூர் பவுடர் - 1 சிட்டிகை
  15. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  16. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  17. நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்களை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
  2. பாஸ்மதி அரிசியை களைந்து வேக வைக்கவும்
  3. கடாயில் நெய் விட்டு 5 முந்திரி வறுத்து தனியே எடுத்துவிட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு வெங்காயம் பச்ச மிளகாய் தாளிக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் மூன்று நிற குடைமிளகாய் சேர்க்கவும்
  5. தேங்காய் துருவல் மற்றும் ஐந்து முந்திரி பருப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  6. குடைமிளகாய் நன்றாக வதக்கியபின் உப்பு மஞ்சள் பொடி கரம் மசாலா ஆம்சூர் பவுடர் காஷ்மீர் சில்லிபவுடர் அரைத்த விழுது எல்லாம் சேர்த்து நன்றாக கிளறவும்
  7. இறுதியாக வேகவைத்த பாஸ்மதி ரைஸ் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடவும்
  8. நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான டிரைகலர் குடைமிளகாய் ரைஸ் தயார்
  9. ஏதாவது ஒரு தயிர் சாலட் உடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்