வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் ரைஸ்

Photo of Coconut milk rice by Krishnasamy Vidya Valli at BetterButter
714
3
0.0(0)
0

தேங்காய் பால் ரைஸ்

Nov-23-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் ரைஸ் செய்முறை பற்றி

இது நோ ஆனியன் நோ கார்லிக் வைகையை சேர்ந்தது. செய்வதும் சுலபம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாஸ்மதி அரிசி - 1 / 2 கப்
  2. தேங்காய் துருவல் - 1 / 2 கப்
  3. கேரட் பொடியாக நறுக்கியது - 1 மேஜைகரண்டி
  4. பட்டாணி - 1 மேஜைகரண்டி
  5. இஞ்சி - 1 சிறிய துண்டு
  6. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  7. நெய்/எண்ணெய் - 2 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 4 தேக்கரண்டி
  9. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  10. முந்திரி பருப்பு - 5
  11. பச்ச மிளகாய் - 1

வழிமுறைகள்

  1. கேரட் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்
  3. தேங்காய் துருவலில் ஒரு தேக்கரண்டி தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள தேங்காய் துருவலில் 3/ 4 கப் தண்ணீர்விட்டு பால் எடுத்துக்கொள்ளவும்
  4. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்/நெய் விட்டு காய்ந்ததும் சீரகம் இஞ்சி பச்ச மிளகாய் பட்டாணி கேரட் சேர்த்து வதக்கவும்
  5. ஊறவைத்த அரிசியை வடிகட்டி விட்டு சேர்க்கவும்
  6. தேங்காய் பால் சேர்த்து கிளறவும்
  7. பால் வற்றி அரிசி வெந்ததும் எண்ணெய்/ நெய்யில் தேங்காய் துருவல் முந்திரி பருப்பு வறுத்து சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் சுவையான தேங்காய் பால் ரைஸ் ரெடி
  8. தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை விருப்பப்பட்டால் ஏதாவது ஒரு சப்ஜியுடன் அல்லது வெள்ளரி ரைத்தாவுடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்