வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் பிரியாணி

Photo of Sweet corn Briyani/ pulav by Saivardhini Badrinarayanan at BetterButter
264
3
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் பிரியாணி

Nov-23-2017
Saivardhini Badrinarayanan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் பிரியாணி செய்முறை பற்றி

அருமையான அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஸ்வீட் கார்ன் 1 கப்
  2. பாசுமதி அரிசி 1 கப்
  3. வெங்காயம் 1 நறுக்கியது
  4. தக்காளி விழுது 1/2 கப்
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. பட்டை 1 இன்ச்
  7. கிராம்பு 3
  8. பிரிஞ்சி இலை 1
  9. மராட்டி மொக்கு 1
  10. சோம்பு 1 மேஜைக்கரண்டி
  11. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  12. தேங்காய் பால் 2 கப்
  13. புதினா 1/2 கப்
  14. கொத்துமல்லி இலை 1/2 கப்
  15. உப்பு
  16. நெய் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஸ்வீட் கார்ன் 3 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு குக்கரில் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, மராட்டி மொக்கு, சோம்பு, வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. பின் அதில் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் வேக வைத்த ஸ்வீட் கார்ன், புதினா இலை , கொத்துமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
  5. பின் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து தேங்காய் பால் 2 கப் சேர்த்து 1 கப் பாசுமதி அரிசி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மூடி போட்டு 2 விசில் வந்தவுடன் , வெங்காயம் பச்சடியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்