வீடு / சமையல் குறிப்பு / Veg briyani

Photo of Veg briyani by Juvaireya R at BetterButter
77
6
0.0(1)
0

Veg briyani

Nov-23-2017
Juvaireya R
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Veg briyani செய்முறை பற்றி

என் குடும்பத்திற்க்கு மிகவும் பிடித்த உணவு, அதனை என் பெட்ட்ர் பட்டர் தோழிகளுக்கு எளிய முறையில் செய்து காட்டுகிறேன்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • ஈத்
 • சௌத்இந்தியன்
 • பாய்ளிங்
 • ஸாட்டிங்
 • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. காரட்+முட்டைக்கோஸ்+பட்டாணி+பின்ஸ்- 1/2 கிலோகிராம்
 2. பாசுமதி அரிசி - 1/2 கிலோகிராம்
 3. நறுக்கிய வெங்காயம் - 1/4 கிலோகிராம்
 4. நறுக்கிய தக்காளி - 3
 5. (பட்டை+ஏலம்- கிராம்பு) பிரியாணி பொடி - 1 தேக்கரண்டி
 6. மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
 7. உப்பு தேவைக்கேற்ப
 8. தயிர் - 1/4 கப்
 9. புதினா, கொத்துமல்லி சிறிதளவு
 10. நெய்- 2 மேஜைக்கரண்டி
 11. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
 12. குங்குமப்பூ - சிறிதளவு

வழிமுறைகள்

 1. தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பட்டை,ஏலம், கிராம்பு ,பச்சை மிளகாய் சேர்த்து,பின் அரிசியையும் சேர்க்கவும்.
 2. 10 நிமிடம் வேகவைத்து வடிக்கட்டி வைக்கவும்.
 3. சட்டியில் நெய்,எண்ணெய் ஊற்றவும்,
 4. .அதில் வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 5. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
 6. காய்கறி சேர்க்கவும்.காய் வேகும்வரை வதக்கவும்
 7. அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
 8. கரம் மசாலா,மிளாகாய் பொடி,உப்பு சேர்க்கவும்
 9. பின் தயிர் சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும்.
 10. குங்குமப்பூவை கரைத்துக் கொள்ள வேண்டும்.
 11. வேறொரு பாத்திரத்தில் முதலில் சாப்பாடு போட்டு,அதன்மேல் குங்குமப்பூ நீரைத்தெளிக்கவும்.
 12. அதன் மேல் தயார் செய்த காய் கலவையை சேர்க்கவும்.
 13. பின் அதன் மேல் மல்லி,புதினா சேர்த்து, பின் அதே போல் சாதாம்-கலவை சேர்க்கவும்.
 14. தம் போட பழைய தோசைக்கல்லை சூடேற்றி அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும்.
 15. 10 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறி பரிமாறலாம்.
 16. சுவையான வெஜ் பிரியாணி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

Biriyani super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்