வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை புலாவ்

Photo of Groundnut Pulav by App Play at BetterButter
448
5
0.0(0)
0

வேர்க்கடலை புலாவ்

Nov-23-2017
App Play
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை புலாவ் செய்முறை பற்றி

அரிசி உணவுகள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 cup – பாஸ்மதி அரிசி
  2. 1 cup –ஊறவைத்து வேகவைத்த வேர்க்கடலை
  3. 1 ¼ cups – தண்ணீர்
  4. ½ tsp – லெமன் ஜூஸ்
  5. அரைக்க:
  6. 10 – முந்திரி
  7. 10 – திராக்ஷை
  8. 2 – பச்சை மிளகாய்
  9. ½ inch – பிஞ்சு இஞ்சி
  10. சின்ன கட்டு – கொத்தமல்லி
  11. ஒரு கைப்பிடி – புதினா
  12. ½ cup – தேங்காய் துருவல்
  13. தாளிக்க:
  14. ½ tsp each of – சோம்பு, சீரகம், மிளகு, கருஞ்சீரகம்
  15. 1 inch long – பட்டைத்துண்டு
  16. 2 – முழு ஏலக்காய்
  17. 1 – அன்னாசிப்பூ
  18. 1 – பிரிஞ்சி இலை
  19. 2 – கிராம்பு
  20. 4 tbsp – குக்கிங் ஆயில்
  21. ½ tsp – மஞ்சள் தூள்
  22. ½ tsp - மிளகாய் தூள்
  23. ½ tsp – தனியா தூள்
  24. ½ tsp – கரம் மசாலா தூள்
  25. 1 to 1 ½ tsp – உப்பு (அல்லது சுவைக்கேற்ற உப்பு)

வழிமுறைகள்

  1. முந்திரி, திராக்ஷை மற்றும் கசகசா உபயோகிப்பதானால் கசகசா மூன்றையும் முழுகும் வரை கொதிநீர் விட்டு ஊற வைக்கவும்.
  2. பாஸ்மதி அரிசியையும் ரெண்டு மூன்று முறை கழுவி முழுகும் வரை நீர் விட்டு ஊற வைக்கவும். அரிசியை அழுக்கு நீங்கும் வரை கழுவினால் அதில் உள்ள ஸ்டார்ச் நீங்கும். ரொம்பவும் கொஞ்சமாக தண்ணீரில் ஊற வைத்தால் அரிசி உடையும், அதனால் முழுகும் வரை தண்ணீர் விட்டு வைக்கவும். குறைந்தது அரை மணி நேரம் ஊறலாம்.
  3. அரிசியும், அரைக்க வேண்டியவைகளும் ஊறும் நேரத்தில் சுண்டலை வேகவைத்துக்கொள்ளலாம். வெந்த சுண்டலை வடிகட்டி வைக்கவும்.
  4. தாளிப்பு சாமான்களை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். இங்கே மசாலா சாமான்கள் முழுதாகவே சேர்க்கிறோம்.
  5. இன்னொரு தட்டில் மஞ்சள் பொடி etc வை சேர்த்து வைக்கவும். எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து வைக்கவும்.
  6. முக்கியக் குறிப்பு: இங்கே நான் சொல்லப்போவது Steeping method ல் பிரியாணி செய்யும் முறை. பிரஷர் குக்கர் அல்லது ரைஸ் குக்கர் இல்லாமலேயே சுலபமாக செய்யக் கூடியது. இதே முறையில் சுலபமாக இருபது முதல் இருபத்தைந்து நிமிடங்களில் பிரியாணி செய்துவிடலாம். செய்ய அடிகனத்த ஒரு பாத்திரம் அல்லது வாணலி தேவை. சின்ன குக்கரிலும் செய்யலாம், குழையாமல் வரும்.
  7. அரைக்க வேண்டியவைகளை அரைத்து மசாலாவை தயார் செய்து வைக்கவும்.
  8. குக்கரில் எண்ணெய் விட்டு முழு மசாலா பொருள்களை சேர்க்கவும். அடுப்பு மீடியம் ஹீட்டில் இருக்கவேண்டியது முக்கியம்.
  9. அடுத்து வடித்து வைத்த வேர்க்கடலை சுண்டலை சேர்க்கவும்.
  10. நன்றாகக் கலந்துவிட்டு அரிசியை வடிகட்டி சேர்க்கவும். எண்ணெயில் நன்றாகப் பிரட்ட வேண்டும்.
  11. அடுத்து அரைத்த மசாலாவை சேர்த்து அரிசி மற்றும் கடலை முழுக்க மசாலா coat ஆகும்படி பிரட்டவும். மசாலா coat ஆகும்போதே நல்ல வாசனை வரும்.
  12. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மசாலா தூள், தனியா தூள், உப்பு எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும். அரிசி உடையாதபடி கரண்டியால் ஜென்ட்டிலா கலக்கவேண்டும். மரக்கரண்டி அல்லது பெரிய fork பெஸ்ட்.
  13. இனி தண்ணீரை சேர்த்து எலுமிச்சம் பழ சாற்றையும் கலந்துவிடலாம்.
  14. இன்னொரு முக்கிய விஷயம், அரைக்க தண்ணீர் சேர்த்திருந்தால் இங்கே தண்ணீர் அளவையும் அதுக்கேத்தமாதிரி குறைக்கலாம். தேங்காய் பால் சேர்ப்பதானாலும் தண்ணீர் அளவை குறைக்கலாம். நான் பொதுவா தண்ணீரை அளப்பதில்லை. அரிசி முழுகும் அளவு தண்ணீர் சேர்ப்பேன், அது கிட்டத்தட்ட ஒரு கப்புக்கு ஒண்ணேகால் கப் என்று இருக்கும். இந்த முறையில், பாஸ்மதி அரிசியில் செய்யும்போது என் அளவு சரியாக இருக்கும்.
  15. முழுகும் வரை தண்ணீர் சேர்த்துவிட்டு அடுப்பை எவ்வளவு குறைவான தீயில் வைக்கமுடியுமோ, அவ்வளவு குறைவா வைச்சுட்டு ஒரு அலுமினியம் foil லால் குக்கரின் வாயை அழுத்தி சீல் செய்துவிடுங்கள். வாசனை நன்றாக வரும்போது சாதம் வெந்தது என்று தெரிந்து கொள்ளலாம். அல்லது ஒரு அழுத்தமான மூடியால் மூடி வைத்தாலும் போதும். அளவான தண்ணீர் என்பதால் சாதா அரிசி போல பொங்குவது எல்லாம் இதில் கிடையாது.
  16. சுமார் இருபது நிமிடங்களில் பிரியாணி வாசனை நன்றாக வரும். அப்போது திறந்து பார்த்து fork அல்லது கரண்டியை ஜெண்டிலா உள்ளே போட்டா அடிப் பிடிக்காமல் இருக்கான்னு செக் பண்ணிக்கலாம். அடுப்பை அணைத்துவிட்டு ஒரு ஸ்பூன் தண்ணீரை மேலே தெளித்து மூடி வைத்துவிட்டால் பிரியாணி மணமாக பதமாக வெந்திருக்கும். இதை சுண்டல் மிஞ்சினாலும் செய்து அசத்தலாமே...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்