வீடு / சமையல் குறிப்பு / காய்கறிச் சோறு

Photo of Vegetable Rice by Asiya Omar at BetterButter
85
5
0.0(0)
0

காய்கறிச் சோறு

Nov-23-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காய்கறிச் சோறு செய்முறை பற்றி

காய்கறிகளுடன், மசாலா,தேங்காய்ப் பால், அரிசி சேர்த்து செய்வது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சீரக சம்பா பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி- அரைக் கிலோ
  2. காய்கறி - கால் கிலோ(கேரட்,பீன்ஸ்,பட்டாணி,உருளை,விரும்பினால் பீட்ரூட்)
  3. வெங்காயம் - 150 கிராம்
  4. தக்காளி-150 கிராம்
  5. மல்லி,புதினா- தலா ஒரு கையளவு
  6. பச்சை மிளகாய் -5
  7. இஞ்சி பூண்டு விழுது - 5 தேக்கரண்டி
  8. கரம் மசாலா -1 தேக்கரண்டி
  9. (ஏலம்,பட்டை,கிராம்புத்தூள்)
  10. தயிர் -100 மில்லி
  11. எலுமிச்சை -பாதி
  12. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா அரை தேக்கரண்டி
  13. தேங்காய்ப்பால் - ஒரு மூடி தேங்காயிலிருந்து
  14. எண்ணெய் 100 மில்லி
  15. நெய் -50 மில்லி
  16. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. நறுக்க வேண்டியவைகளை நறுக்கி, எல்லாம் தயார் செய்து வைக்கவும்.
  2. அரிசி ஊற வைக்கவும்,தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும்.
  3. அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும். வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா சேர்க்கவும்.
  4. சிம்மில் வைத்து வதக்கவும்.
  5. மல்லி,புதினா,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி,சிறிது உப்பு சேர்த்து மூடி போடவும்.
  7. கூட்டு போல் ஆனவுடன் மஞ்சள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
  8. காய்கறிகள் சேர்க்கவும்.
  9. சேர்த்து பிரட்டவும.சிறிது மூடி வேக விடவும்.
  10. தயிர் சேர்க்கவும்.
  11. நன்கு கலந்து விடவும்.
  12. எல்லாம் சேர்ந்து பாதி வேக்காடு வெந்து வரும் பொழுது அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு, அரை தேங்காயில் எடுத்த தேங்காய்ப்பாலை அளந்து,முதல் பால்,இரண்டாம்,மூன்றால் பால் எல்லாம் சேர்த்து இரண்டு அளவாக எடுத்து வைக்கவும்.
  13. தேங்காய்ப்பால் சேர்க்கவும்.கொதி வரும் பொழுது அரிசியை தட்டவும்.
  14. அரிசி வெந்து மேலே வரும் பாதி எலுமி ச்சை பிழியவும்,நெய் சேர்க்கவும்.
  15. அலுமினியம் பாயில் கொண்டு மூடி தம் போடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.கீழே பழைய தோசை தவாவை வைத்தால் அடி பிடிக்காது.
  16. 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். திரும்ப 10 நிமிடம் கழித்து சட்டியை திறக்கவும்.
  17. சுவையான காய்கறிச்சோறு தயார். இதனை விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்