வீடு / சமையல் குறிப்பு / பச்சரிசி பால் பொங்கல்

Photo of Raw rice milk pongal by Sowmya Sundar at BetterButter
568
3
0.0(0)
0

பச்சரிசி பால் பொங்கல்

Nov-24-2017
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சரிசி பால் பொங்கல் செய்முறை பற்றி

தைப்பொங்கலன்று இந்த பால் பொங்கலை செய்து வழிபடுவது வழக்கம். நான் ஒரு மாறுதலுக்கு முக்கால் பாகம் வெல்லமும் கால் பாகம் டைமண்ட் கல்கண்டு சேர்த்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 3/4 கப்
  2. பாசிப்பருப்பு- 4 டேபிள்ஸ்பூன்
  3. பால் - 3 கப்
  4. தண்ணீர்- 1 கப்
  5. பாகு வெல்லம் (பொடித்தது)- 1 1/4 கப்
  6. கல்கண்டு(பொடித்த) - 1/4 கப்
  7. நெய் - 1/4 கப்
  8. முந்திரி பருப்பு, ஏலக்காய் - சிறிது
  9. குங்கும பூ- சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. அதே கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அரிசி, பருப்பை லேசாக சூடாகும் வரை வறுத்து கொள்ளவும்.
  3. ஒரு கிண்ணத்தில் சிறிது பாலில் குங்கும பூவை ஊறவைத்து கொள்ளவும்.
  4. ஒரு குக்கரில் பால் ,தண்ணீருடன் அரிசி பருப்புசேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.
  5. பிறகு ஒரு கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி பொடி செய்த வெல்லம், கல்கண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை (5 நிமிடம்) கொதிக்க விடவும்.
  6. இதனுடன் வெந்த அரிசி பருப்பு சேர்த்து நெய் விட்டு கிளறி முந்திரி பருப்பு, ஏலக்காய்,,பாலில் ஊற வைத்த குங்கும பூ சேர்த்து கிளறி இறக்கவும்.
  7. சுவை மிகுந்த பால் பொங்கல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்