வீடு / சமையல் குறிப்பு / பிரெட் அல்வா

Photo of Bread Halwa by Preeti Tamilarasan at BetterButter
2952
301
4.4(0)
0

பிரெட் அல்வா

Jan-18-2016
Preeti Tamilarasan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • இந்திய
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 5-7 பிரெட் துண்டுகள் ( நான் கோதுமை பிரெட் பயன்படுத்தினேன்)
  2. 300 மிலி காய்ச்சியப் பால்
  3. 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  4. 1 தேக்கரண்டி ரோஸ் எசென்ஸ் (விருப்பம்)
  5. 1 மற்றும் 1/2 கப் ரீபைண்டு செய்யப்படாத கரும்புச் சர்க்கரை
  6. 5-6 தேக்கரண்டி நெய்/வெளுக்கப்பட்ட வெண்ணெய் (அல்லது) எண்ணெய்
  7. அலங்கரிக்க நறுக்கிய பருப்புகள்

வழிமுறைகள்

  1. பழுப்புக் கட்டிகளை நீக்கி பிரட் துண்டுகளை 4-5 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 3 தேக்கரண்டி நெய்யை ஒரு வறுவல் பாத்திரத்தில் அல்லது கடாயில் சூடுபடுத்திக்கொள்ளவும். இந்த பிரெட் துண்டுகளை அவை பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும். தீயை அடக்கி பாலை ஊற்றவும்.
  2. நன்றாகக் கலக்கி, ஏலக்காய்த் தூளை சேர்க்கவும். பிரெட் துண்டுகள் மிருதுவாகவும் கூழாகவும் மாறும்வரை வேகவைக்கவும். அவ்வப்போது கலக்கவும், அல்வாவின் அடிப்பாகம் தீயாமல் இருப்பதற்கு.
  3. ரோஸ் எசென்சைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (விருப்பம்). அல்வா அடர்த்தியானதும், கரும்புச் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  4. மேலும் ஒரு சமயத்தில் 1 தேக்கரண்டி நெய்யைச் சேர்த்து பாத்திரத்தின் பக்கவாட்டில் எண்ணெய் கசியும்வரை சமைக்கவும். இப்போது நறுக்கிய பருப்புகளைச் சேர்த்து ஒரு கலக்கு கலக்கவும்.
  5. அடுப்பிலிருந்து இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்