வீடு / சமையல் குறிப்பு / நண்டு கோலா உருண்டை/நண்டுக்கறி உருண்டை

Photo of Nandu Kola Urundai / Crab Meat Balls by Preeti Tamilarasan at BetterButter
3031
26
0(0)
0

நண்டு கோலா உருண்டை/நண்டுக்கறி உருண்டை

Jan-18-2016
Preeti Tamilarasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • ఇతర
 • తమిళనాడు
 • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. 150 கிராம் நண்டுக் கறி
 2. 80 கிராம் வேகவைத்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு
 3. 3 முத்து வெங்காயம் - நறுக்கப்பட்டது
 4. 2 தேக்கரண்டி தேங்காய்த் துருவல்
 5. 1/2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
 6. 1 தேக்கரண்டி வறுத்தக் கடலைப்பருப்பு
 7. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 8. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 9. 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
 10. 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
 11. 1/4 தேக்கரண்டி மிளகுத்தூள்
 12. சுவைக்கேற்ற உப்பு
 13. 1/4 கப் புதினா இலைகள்
 14. 1 குச்சி கரிவேப்பிலை
 15. 1 தேக்கரண்டி அடித்துவைத்துள்ள முட்டை

வழிமுறைகள்

 1. வறுத்த நண்டுக்கறியை 1 தேக்கரண்டி எண்ணெயுடன் கலக்கவும், உலர் புர்ஜி கலவைபோல் வரும்வரை. எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து,அடித்து வைத்துள்ள முட்டையைத் தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து சேர்வைப்பொருள்களையும் கலந்துகொள்ளவும். நன்றாகக் கலந்து ஒரு பிளண்டரில் கரடுமுரடான சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 2. இப்போது, ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அடித்து வைத்துள்ள முட்டையைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுதது வைத்துக்கொள்ளவும். சாந்தை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து, எடுத்து வைத்துக்கொள்ளவும். பனியாரப் பாத்திரத்தைச் சூடுபடுத்திக்கொள்க, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து. பாத்திரத்தின் ஒவ்வொரு குழியிலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு உருண்டைகளை அதில் போடவும்.
 3. தீயைக் குறைத்து சமைக்கவும், இல்லையேல் மேல் பகுதி சீக்கிரம் வெந்து உள் பகுதி வேகாமல் இருக்கும். ஒவ்வொரு ஈடுக்கும் 10-15 நிமிடங்கள் ஆகும், சமைப்பதற்கு.
 4. சூடாக தேங்காய் சட்டினி அல்லது புதினா சட்டினியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்