மட்டன் கறிவேப்பிலை பிரியாணி | Mutton & Curry Leaves Biryani in Tamil

எழுதியவர் Preeti Tamilarasan  |  18th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mutton & Curry Leaves Biryani by Preeti Tamilarasan at BetterButter
மட்டன் கறிவேப்பிலை பிரியாணிPreeti Tamilarasan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

637

0

Video for key ingredients

 • How to make Coconut Milk

மட்டன் கறிவேப்பிலை பிரியாணி recipe

மட்டன் கறிவேப்பிலை பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton & Curry Leaves Biryani in Tamil )

 • 250 கிராம் மட்டன்
 • 1 மற்றும் 1/2 சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி - தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறுவைத்தது
 • 1/2 தேக்கரண்டி இஞ்சி - பூண்டு விழுது
 • 2 கப் தேங்காய் பால்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
 • 4 தேக்கரண்டி கொங்கு பாணி மல்லித்தூள்
 • 1/2 கப் புதினா இலைகள்
 • 1/2 கப் நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்
 • 2 தேக்கரண்டி தயிர்/கட்டித்தயிர்
 • 20-30 கரிவேப்பிலை
 • 2 காய்ந்த சிவப்பு மிளகாய்
 • 2 பச்சை மிளகாய்
 • 1 நடுத்த அளவில் உள்ள வெங்காயம் - நறுக்கப்பட்டது
 • 1 எலுமிச்சையிலிருந்து சாறு
 • சுவைக்கேற்ற உப்பு
 • 4 தேக்கரண்டி மணிலா எண்ணெய்

மட்டன் கறிவேப்பிலை பிரியாணி செய்வது எப்படி | How to make Mutton & Curry Leaves Biryani in Tamil

 1. மஞ்சள் தூள் கொண்டு மட்டனை மேரினேட் செய்து எடுத்து வைக்கவும். 1 தேக்கரண்டி எண்ணெயை கடாயில் சூடுபடுத்திக்கொள்க. உடைத்த சிவப்பு மிளகாய்கள், கறிவேப்பலை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். சிறிதுநேரம் வேகவைத்து அடுப்பிலிருந்து எடுததுவிடவும். ஆறவிடவும். அதன்பிறகு இந்த சேர்வைப்பொருள்களை ஒன்றாக அரைத்துக்கொள்க.
 2. ஒரு பிரஷர் குக்கரில் 3 தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. மேரினேட்செய்யப்பட்ட ஆட்டிரைச்சியை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு சிறு தீயில் வேகவைக்கவும். புதினா, கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். அதன்பிறகு அரைத்த சாந்தைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். தயிர், 2 தேக்கரண்டி கொத்துமல்லித்தூள் சேர்க்கவும்.
 3. 10 விசிலுக்கு சிறுதீயில் பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். தீயிலிருந்து எடுத்து ஆறவிடவும். மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். தண்ணீர் அளவு சரிசெய்யவும். (சீரிக சம்பா அல்லது பாஸ்மதி அரிசிக்கு 2:1 விகிதம்.
 4. கொதிக்கட்டும். இப்போது அரிசி, எலுமிச்சை சாறு, சுவைக்கு உப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கி மூடியிட்டு 8 நிமிடங்களுக்கு குறைவான நடுத்தர தீயில் வேகவைக்கவும்.
 5. இப்போது ஒரு இரும்பு தவாவின் மீது இந்தக் குக்கரை வைக்கவும். டிரம்மில் மேலும் 20 நிமிடங்கள் குறைவானத் தீயில் வேகட்டும்.
 6. சிறப்பான சுவைக்குச் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Mutton & Curry Leaves Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.