வீடு / சமையல் குறிப்பு / Horsegram Chutney

Photo of Horsegram Chutney by Adaikkammai annamalai at BetterButter
0
7
5(1)
0

Horsegram Chutney

Nov-24-2017
Adaikkammai annamalai
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Horsegram Chutney செய்முறை பற்றி

how to make kollu thovayal in tamil

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • టిఫిన్ వంటకములు
 • భారతీయ
 • సైడ్ డిషెస్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. கொள்ளு : ஒரு கை அளவு
 2. வெங்காயம் : 2
 3. தக்காளி : 1
 4. பூண்டு : 5 பல்
 5. இஞ்சி : சிறுதுண்டு
 6. வரமிளகாய் : 5
 7. துருவிய தேங்காய் : ஒரு கை அளவு
 8. உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி
 9. பெருங்காயம் : 1 சிட்டிகை
 10. கருவேப்பிலை : சிறிது
 11. எண்ணைய் : தேவையான அளவு
 12. உப்பு : தேவையான அளவு

வழிமுறைகள்

 1. முதலில் கொள்ளு வாங்கி அதில் இருக்கும் கல்லை எடுக்கவும்.
 2. எடுத்த ஒரு கை அளவு கொள்ளை ஒரு மணி நேரம் முன்பு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஆகியவுடன் கொள்ளை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
 3. நல்லெண்ணெய் வதக்கும் அளவு ஊத்தி, 1/2 தேக்கரண்டி உளுந்து , சிறிதளவு பெருங்காயம், கருவேப்பிலை , பொன் நிறமாக வதக்கவும்.
 4. பிறகு அதில் 5 பல் பூண்டு மட்டும், சிறிதுண்டு இஞ்சியை போட்டு பச்சை வாடை போகும் அளவு நன்றாக வதக்கவும்.
 5. வதக்கிய பின் நறுக்கிய 2 வெங்காயம், 1 தக்காளி, வரமிளகாய் 5 ( காரத்திற்க்கு ஏற்றாற் போல் ), ஒரு கை அளவு கொல்லு, உப்பு ( தேவையான அளவு) ,போட்டு நன்றாக வதக்கவும்.
 6. நன்றாக வதக்கிய பின் துருவிய தேங்காயை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
 7. வதக்கிய அனைத்தும் ஆறியவுடன் மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
 8. நல்லெண்ணைய் ஊற்றி அதில் சிறிது கடுகு, உளுந்து , கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்து வைத்த துவையலில் கொட்டவும்.
 9. தாளித்து கொட்டி நன்றாக கிளறவும், கிளறிய பின் இட்லி அல்லது தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும்.
 10. கொள்ளு உடம்பு இளைக்க உதவும்... ஆரோக்கியமான உணவு.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalyani
Nov-27-2017
Kalyani   Nov-27-2017

Udalukku nallathu nalla recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்