வீடு / சமையல் குறிப்பு / வேப்பம் பூ சாதம்

Photo of Neem flower rice by saranya sathish at BetterButter
967
3
0.0(0)
0

வேப்பம் பூ சாதம்

Nov-24-2017
saranya sathish
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேப்பம் பூ சாதம் செய்முறை பற்றி

வேப்பம் பூ சேர்த்து சமைக்கபட்ட கலவை சாதம். குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை தரலாம். இந்த சாதம் ஒரு இயற்கையான பூச்சி மருந்தாக செயல்படும். வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழித்து பசியை அதிகமாக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த சாதம் - 1 கப்
  2. எண்ணெய் அல்லது நெய் - 2 ஸ்பூன்
  3. கடுகு - 1/2 ஸ்பூன்
  4. உளுந்து - 1/2 ஸ்பூன்
  5. கருவேப்பிலை
  6. உப்பு
  7. காய்ந்த மிளகாய் - 2
  8. வேப்பம் பூ - 4 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேப்பம் பூவை 1 வாரம் நன்றாக வெயிலில் உலர்த்தவும். பின் கடைந்த மோரில் நினைத்து வெயிலில் உலர்த்தவும். இதை மேலும் 2 முறை செய்து சற்று கிரிஸ்பாகும் வரை உலர்த்தி காற்று புகாத டப்பாவில் வைக்கவும். ஈரப்பதம் சிறிது கூட இருக்ககூடாது.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்.
  4. உப்பு, காய்ந்த வேப்பம் பூவை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  5. பின் வேகவைத்த சாதம் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்