வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு புலாவ்

Photo of Potato pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
447
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு புலாவ்

Nov-24-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு புலாவ் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு என்றால் பிடிக்காதவர்களே இல்லை எனும் ஆளவிற்கு யுனிவெர்சல் வெஜிடபிள் இது. எனவே இதை வைத்து செய்யும் ரைஸ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாஸ்மதி அரிசி - 1 / 2 கப்
  2. உருளைக்கிழங்கு - 1
  3. வெங்காயம் - 1
  4. கேரட் - 1 சிறிது
  5. பட்டாணி - 1 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1/2தேக்கரண்டி
  8. ஏலக்காய் கிராம்பு - தலா 1
  9. பட்டை - 1 சிறிய துண்டு
  10. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  11. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  12. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4
  13. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  14. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  15. நெய் / எண்ணெய் - 2 தேக்கரண்டி
  16. நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு -5 (விருப்பப்பட்டால்)
  17. உருளை மசாலாவிற்கு தேவையானவை
  18. கான்பிளவர் - 1 தேக்கரண்டி
  19. உப்பு - 2 சிட்டிகை
  20. காஷ்மீர் சில்லிபவுடர் - 2 சிட்டிகை
  21. ஆம்சூர் பவுடர் - 1 சிட்டிகை
  22. கரம் மசாலா - 1 சிட்டிகை
  23. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  24. டீப் ப்ரை அல்லது ஷாலோ பிரை பண்ணுவதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை மீடியம் ஸைஸில் நறுக்கவும். வெங்காயம் கேரட் பொடியாக நறுக்கவும்
  2. பாஸ்மதி அரிசியை அரைமணிநேரம் ஊறவைத்துவிட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  3. உருளைகிழங்கை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து வடிகட்டிக்கொள்ளலாம்
  4. உருளைகிழங்குடன் கொடுக்கப்பட்ட மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக கிளறவும்
  5. ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கிளறி ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு மசாலா தடவிய உருளைக்கிழங்கை பொரித்து/ஷாலோ பிரைசெய்துஎடுக்கவும்
  7. மற்றொரு கடாயில் நெய்/எண்ணெய் விட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் தாளித்து பச்ச வாசனை போனவுடன் கேரட் பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. உப்பு காஷ்மீர் சில்லிபவுடர் கரம் மசாலா மஞ்சள்பொடி சேர்க்கவும். பச்ச வாசனைபோனவுடன் வேக வைத்த சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்
  9. பொரித்து வைத்த மசாலா உருளைகிழங்கை சேர்க்கவும்
  10. வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் சுவையான உருளைக்கிழங்கு புலாவ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்