வீடு / சமையல் குறிப்பு / பின்டி புலாவ்

Photo of Bhindi pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
874
2
0.0(0)
0

பின்டி புலாவ்

Nov-24-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பின்டி புலாவ் செய்முறை பற்றி

வெண்டைக்காய் தென் இந்தியாவில் உள்ள முக்கியமான காய். ஆனாலும் அதைவைத்து வட இந்திய உணவான புலாவ் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃப்யூஷன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாஸ்மதி அரிசி - 1 / 2 கப்
  2. வெண்டைக்காய் - 5
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  6. ஏலக்காய் கிராம்பு - தலா 1
  7. பட்டை - 1 சிறிய துண்டு
  8. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  10. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  11. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  12. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  13. மஞ்சள்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  14. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  15. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  16. பொரிப்பதற்கு/ஷாலோ ப்ரை க்குதேவையான அளவு எண்ணெய்
  17. நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு - 5 ( விருப்பப்பட்டால் )

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை கறிக்கு நறுக்குவது போல் நறுக்கி வைக்கவும் வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் தக்காளியை மிக்ஸியில் அரைக்கவும்
  2. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  3. வெண்டைக்காயை எண்ணெய் விட்டு பொரித்து /ஷாலோ பிரைசெய்துஎடுக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் இஞ்சி பூண்டு பேஸ்ட் பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பச்ச வாசனை போனவுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
  6. உப்பு கரம் மசாலா மஞ்சள்பொடி காஷ்மீர் சில்லிபவுடர் தனியா பொடி சேர்க்கவும்
  7. நன்றாக கொதி வந்து கெட்டியாக ஆரம்பிக்கும் போது வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் சேர்க்கவும்
  8. இரண்டு நிமிடங்கள் கழித்து வேக வைத்த சாதம் சேர்த்து கிளறவும்
  9. கொத்தமல்லி இலை தூவினால் ருசியான பின்டி புலாவ் தயார் . விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்