மாங்காய் சாதம் | Raw Mango Rice in Tamil

எழுதியவர் Priya Suresh  |  18th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Raw Mango Rice by Priya Suresh at BetterButter
மாங்காய் சாதம்Priya Suresh
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

526

0

மாங்காய் சாதம் recipe

மாங்காய் சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Raw Mango Rice in Tamil )

  • 2 கப் சாதம்
  • 1 கப் துருவப்பட்ட பச்சை மாங்காய்
  • 3 எண்ணிக்கை பச்சை மிளகாய் (பிளக்கப்பட்டது)
  • 1 தேக்கரண்டி இஞ்சி சீவல்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
  • 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • 3 எண்ணிக்கை காய்ந்த சிவப்பு மிளகாய்
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • கொஞ்சம் கரிவேப்பிலை
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • உப்பு

மாங்காய் சாதம் செய்வது எப்படி | How to make Raw Mango Rice in Tamil

  1. சாதத்தையும், மாங்காய்த் துருவலையும் ஒரு தட்டில் எடுத்துக்கொள்க. உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். போதுமான எண்ணெயை ஒரு பெரிய கடாயில் எடுத்து சூடுபடுத்திக்கொள்க. கடுகைப் பொறித்து, அதன்பின் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வேர்கடலை சேர்த்து தொடர்ந்து வறுக்கவும்.
  2. இப்போது கரிவேப்பிலை, பிளந்த பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். இந்த சூடாக்கப்பட்ட மசாலாப் பொருள்களை உடனே தயாராக உள்ள சாதம் மாங்காய் கலவையில் சேர்க்கவும்.
  3. நன்றாகக் கலக்கவும். கொஞ்சம் அப்பளம் பொறித்து சூடாகப் பரிமாறவும்.

Reviews for Raw Mango Rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.