வீடு / சமையல் குறிப்பு / பாதாம் ரைஸ் கீர்

Photo of Almond rice kheer by Asiya Omar at BetterButter
58
9
0.0(0)
0

பாதாம் ரைஸ் கீர்

Nov-24-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாதாம் ரைஸ் கீர் செய்முறை பற்றி

பாதாம்,பாசுமதி அரிசி,பால்,சாப்ரான் சேர்த்து செய்தால் அமிர்தம் தான்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கெட்டியான பால் - அரை லிட்டர்
  2. நெய் - 1 மேஜைக்கரண்டி
  3. ஏலக்காய் -3 அல்லது ஏலக்காய்த்தூள் - கால்டீஸ்பூன்
  4. சாப்ரான் - பின்ச் ( குங்குமப்பூ)
  5. பாதாம் தோல் நீக்கியது -15
  6. வேகவைத்த பாசுமதி சோறு - அரைகப்
  7. ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 4 -5 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் தயாராய் வைக்கவும்.
  2. அரை லிட்டர் பாலைக்காய்ச்சவும்.பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
  3. ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய்,ஏலக்காய் சேர்க்கவும்.நெய் உருகும் பொழுது காய்ச்சிய பால் சேர்க்கவும்.சாப்ரான்,நறுக்கிய பாதாம் சேர்க்கவும்.
  4. கலந்துவிட்டு வேகவைத்து மசித்த.பாசுமதி சோறு சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதித்து வற்றி வரும்.அடிபிடிக்காமல் கிளறவும்.
  5. நன்கு வற்றி வரும் பொழுது கண்டன்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.இல்லையெனில் சுவைக்கு சீனி சேர்க்கலாம்.
  6. ஊற்றுவது போல் கெட்டியாக இருக்கும்.அடுப்பை அணைக்கவும்.
  7. ஆறினால் இன்னும் கெட்டியாகும்.வெது வெதுப்பாக அல்லது ப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.
  8. சுவையான பாதாம் ரைஸ் கீர் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்