வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் சாதம்

Photo of Sambar sadam by Krishnasamy Vidya Valli at BetterButter
762
2
0.0(0)
0

சாம்பார் சாதம்

Nov-24-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் சாதம் செய்முறை பற்றி

சாதம் வகைகளில் முதலாவது ஹோட்டல்களில் செய்யப்படுவது இந்த சாம்பார் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி - 1 கப்
  2. துவரம்பருப்பு - 1 / 2 கப்
  3. காய்கள் - (பொடியாக நறுக்கியது வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு கேரட் முருங்கைக்காய் பூசணிக்காய் எல்லாம் சேர்த்து ) - 1 கப்
  4. உப்பு - 3/ 4 தேக்கரண்டி
  5. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  6. வறுத்து அரைக்க கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி மிளகாய் வத்தல் - 3 பெருங்காயம் - 1 சிட்டிகை வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  8. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி கருவேப்பிலை - 2 ஆர்க்கு பெருங்காயம் - 1 சிட்டிகை
  9. நெய்/எண்ணெய் - 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. சாதம் பருப்பு வேக வைக்கவும்
  3. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்/எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுக்கப்பட்ட எல்லாம் சேர்த்து வறுக்கவும்
  4. ஆறவிட்டு மிக்ஸியிஸ் கரகரப்பாக திரிக்கவும்
  5. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து காய்கள் போட்டு வதக்கவும்
  6. தண்ணீர் சேர்த்து வேக விடவும். பாதி வெந்தவுடன் மஞ்சள் பொடி உப்பு புளி கரைத்து சேர்க்கவும்
  7. அரைத்த விழுதை சேர்க்கவும்
  8. பருப்பு போட்டு ஒரு கொதி வந்தவுடன் சாதம் சேர்த்து கிளறவும் மீதமுள்ள நெய் /எண்ணெய் சேர்க்கவும் கொத்தமல்லி இலை தூவினால் சுவையான சாம்பார் சாதம் தயார். உருளைக்கிழங்கு காரக்கறி அல்லது முட்டைகோஸ் பொரியலுடன் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்