புழுங்கல் அரிசி பிரியாணி | Brown rice biryani in Tamil

எழுதியவர் Alka Jena  |  18th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Brown rice biryani by Alka Jena at BetterButter
புழுங்கல் அரிசி பிரியாணிAlka Jena
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

760

0

புழுங்கல் அரிசி பிரியாணி recipe

புழுங்கல் அரிசி பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Brown rice biryani in Tamil )

 • புழுங்கல் அரிசி - 1 கப் ( நான் தாவாத் துரித சமையல் புழுங்கல் அரிசி பயன்படுத்தினேன்)
 • வெங்காயம் - 1 நடுத்தர அளவு
 • வறுத்த வெங்காயம் - 1 கப்
 • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
 • இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் -2 பிளந்தது
 • தயிர் - 1/2 கப்
 • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 • குங்குமப்பூ - 5-6 தாள்
 • பால் - 1/4 கப்
 • நெய் - 1 தேக்கரண்டி
 • பன்னீர் தண்ணீர் - சில துளிகள்
 • காய்கறிக் கலவை - கேரட் 1, பீன்ஸ் - 5-6, பேபி கார்ன் -2ல் இருந்து 3, காலிபிளவர் - 2 பூ, பட்டாணி - கையளவு
 • பன்னீர் - 100 கிராம்
 • 1 தேக்கரண்டி புதினா இலை
 • சுவைக்கு
 • எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி
 • கிராம்பு - 2
 • பச்சை ஏலக்காய் - 2
 • இலவங்கப்பட்டை - 1இன்ச் துண்டு
 • நட்சத்திர சோம்பு - 1 எண்ணிக்கை
 • ஜாதிக்காய் மேலோடு - 1 எண்ணிக்கை
 • பிரிஞ்சி இலை - 1 எண்ணிக்கை
 • ஷாஹி சீரகம் - 1 தேக்கரண்டி

புழுங்கல் அரிசி பிரியாணி செய்வது எப்படி | How to make Brown rice biryani in Tamil

 1. புழுங்கல் அரிசியைக் கழுவி குறைந்தது 1 மணி நேரம் வெந்நீரில் ஊறவைக்கவும்.
 2. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி கேரட்டின் தோலை எரித்து மெல்லிய பட்டைகளாக நறுக்கி, பீன்ஸ், பேபி கார்னை 1 இன்ச் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். காலிபிளவரை சிறுசிறு பூக்களாக நறுக்கிக்கொள்ளவும்.
 3. பன்னீரை சதுரத் துண்டுகளாக நறுக்கி 1 தேக்கரண்டி எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக்கொள்ளவும்.
 4. போதுமானத் தண்ணீரை ஒரு ஆழமான நான் ஸ்டிக் கடாயில் சூடுபடுத்தி, அரிசி, உப்பு, இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, பச்சை ஏலக்காய், பிரிஞ்சி இலை, ஜாதிக்காய் மேலோடு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும். அரிசி வெந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
 5. அரிசியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்க.
 6. இன்னொரு நான் ஸ்டிக் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து அது வெடிக்க ஆரம்பித்ததும், நறுக்கப்பட்ட வெங்காயம் பிளக்கப்பட்ட மிளகாய் சேர்த்து அவை பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
 7. இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
 8. காய்கறி கலவைகள் சேர்த்து, உப்பு சரிபார்த்து, 4ல் இருந்து 5 நிமிடங்கள் காய்கறிகள் அரைவேக்காட்டுக்கு வரும்வரை வதக்கவும். பன்னீர் தயிர் சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும். கரம் மசாலாத் தூளைச் சேர்த்து மீண்டும் கலக்கிக்கொள்ளவும். வறுத்த வெங்காயத்தை அதனோடு சேர்த்து சற்றே உலரும்வரை வறுக்கவும்.
 9. குங்குமப்பூவையும் பாலையும் ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து ஒரு மைக்ரோ ஓவனின் ½ நிமிடம் சூடுபடுத்தவும்.
 10. வேகவைக்க காய்கறிகளின் மீது சாதத்தைப் பரப்பவும். குங்குமப்பூ பால், கொஞ்சம் வறுத்த வெங்காயம், பன்னீர் தண்ணீர், கரம் மசாலாத் தூள், கொஞ்சம் புதிதாகக் கிழித்து வைத்துள்ள புதினா இலைகளைச் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி சில்வர் தாளால் சீல் வைக்கவும்.
 11. ஒரு தவாவைச் சூடுபடுத்தி அதன் மீது வைத்து 10-12 நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும். உங்களுக்குப் பிடித்த புதிய குளிரூட்டப்பட்டரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Brown rice biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.