புளி சாதம் | Tamarind rice in Tamil

எழுதியவர் neela karthik  |  25th Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Tamarind rice by neela karthik at BetterButter
புளி சாதம்neela karthik
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  7

  மக்கள்

3

0

புளி சாதம்

புளி சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Tamarind rice in Tamil )

 • *அரைக்க
 • கடலை பருப்பு 1 1/2 ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு 1 1/2 ஸ்பூன்
 • எள் 1 ஸ்பூன்
 • கொத்தமல்லி 2 ஸ்பூன்
 • மிளகு 1/2 ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் 4
 • வெந்தயம் 1/4 ஸ்பூன்
 • *தாளிக்க
 • நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
 • கடுகு 1 ஸ்பூன்
 • வர மிளகாய் 2
 • கறிவேப்பிலை சிறிது
 • நிலக்கடலை சிறிது
 • புளி பெரிய எலுமிச்சை அளவு(கரைத்து வைக்கவும்)
 • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
 • உப்பு தேவைக்கேற்ப

புளி சாதம் செய்வது எப்படி | How to make Tamarind rice in Tamil

 1. முதலில் வெறும் வாணலியில் க.பருப்பு ,உ.பருப்பு,எள்,கொத்தமல்லி, மிளகாய்,மிளகு அனைத்தையும் தனி தனியாக மிதமான தீயில் வறக்கவும்
 2. அவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
 3. சிறிது கொர கொரப்பாக அரைக்கவும்
 4. வாணெலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும் கடுகு பொரிந்ததும் மிளகாய், கறிவேப்பிலைபோடவும் பின் புளி கரைசலை ஊற்றவும்
 5. அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்
 6. புளி கரைசல் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தூளை சேர்க்கவும்
 7. 5 நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு பின் இறக்கினால் புளி குழம்பு தயார்
 8. பின்னர் வடித்து ஆற வைத்த சாதத்தில் தயார் செய்த குழம்பை ஊற்றி கிளறவும்
 9. சிறிது நல்லெண்ணை நிலக்கடலை சேர்த்து கொள்ளலாம்.உப்பு சரிபார்த்து தேவைக்கேற்ப மீண்டும் சேர்த்து கிளறினால் சாதம் தயார்

எனது டிப்:

விருப்பபட்டால் பூண்டு சேர்க்கலாம்.,,, புளி குழம்பு தேவையான அளவு எடுத்து கொண்டு மீதியை கை படாமல் வைத்தால் 1 வாரம் கெடாது

Reviews for Tamarind rice in tamil (0)