வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் புலாவ்

Photo of CHICKEN PULLAO by Munsila Fathima at BetterButter
677
3
0.0(0)
0

சிக்கன் புலாவ்

Nov-25-2017
Munsila Fathima
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் புலாவ் செய்முறை பற்றி

பெங்காலி பாணியில் செய்த சிக்கன் புலாவ். நான் புத்தகத்தில் படித்ததை வைத்து செய்துள்ளேன். என் சுவைக்கேற்ப செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மேற்கு வங்காளம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசுமதி அரிசி - 300gm
  2. சிக்கன் - 300gm
  3. பிரிஞ்சி இலை - 1
  4. சிக்கன் ஸ்டாக் - 1/2 கட்டி
  5. வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
  6. இஞ்சி- 20 -25 gm (நறுக்கியது)
  7. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  8. பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை - 15gm
  9. குங்குமப்பூ - 1/8 தேக்கரண்டி ( சூடான பாலில் கரைந்தது)
  10. நெய் - 3 மேஜைக்கரண்டி
  11. பால் - 350 ml
  12. சர்க்கரை- 1/4 தேக்கரண்டி
  13. உப்பு - தேவைக்கேற்ப
  14. கருஞ்சீரகம்- 1/4 தேக்கரண்டி
  15. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  16. மல்லி - 1/4 தேக்கரண்டி
  17. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  18. பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சிக்கனை கழுவி தண்ணீர் வடித்து கொள்ளுங்கள்.
  2. மல்லி, சீரகம், கருஞ்சீரகம், உப்பு, மிளகாய் தூள் , பட்டை, இஞ்சி,, கிராம்பு ஏலக்காய் தூள் (பாதி) சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்.
  3. பொடித்த கலவையை சிக்கனுடன் சேர்த்து நன்கு விரவி ஒரு காட்டன் துணியில் வைத்து கட்டி கொள்ளுங்கள். நன்கு கொதிக்கும் நீரில் அந்த பையை போட்டு சிக்கனை வேக விடுங்கள்.
  4. சிக்கன் வெந்ததும் துணியை தண்ணீரில் இருந்து அகற்றி விடுங்கள்.
  5. வாணலியில் நெய் ஊற்றி மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் சேர்த்து மனம் வந்ததும் வெங்காயம் ,இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  6. சிவந்ததும் அரிசி, சர்க்கரை, உப்பு, சிக்கன் ஸ்டாக் சேர்த்து பிரட்டி கொள்ளுங்கள்.
  7. அதனுடன் பால் சேர்த்து மிதமான தீயில் அரிசியை வேக விடுங்கள்.
  8. அதே சமயம் பதம், பிஸ்தா , உலர் திராட்சை எல்லாம் நெய்யில் சற்று வதக்கி கொள்ளுங்கள்.
  9. அரிசி வெந்தவுடன் அதை மூன்று பாகமாக பிரித்து கொள்ளுங்கள்.
  10. அரிசி அதன் மேல் கொஞ்சம் தயிர், பாதாம், பிஸ்தா, உ.திராட்சை, சிக்கன், குங்குமப்பூ கலவை சேருங்கள்.
  11. மேல கூறிய ஸ்டெப்பை மறுபடியும் ஒரு முறை செய்து. மேல அரிசியை சேர்த்து 10 - 15 நிமிடம் தம் வையுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்