வீடு / சமையல் குறிப்பு / மீன் காய்கறி புலாவ்

Photo of Fish Veg pulav by Asiya Omar at BetterButter
643
5
0.0(0)
0

மீன் காய்கறி புலாவ்

Nov-26-2017
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் காய்கறி புலாவ் செய்முறை பற்றி

இந்த புலாவில் காய்கறிகள் சேர்த்து அத்தோடு பொரித்த மீனும் சேர்த்து செய்துள்ளேன்.இனி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முதலில் மீன் பொரிக்க தே.பொ:-
  2. மீன் துண்டுகள் - 400 கிராம்( முள் இல்லாதது)
  3. மிளகாய்த்தூள் -1 அல்லது 2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  5. மிளகு த்தூள் - அரைதேக்கரண்டி
  6. கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  7. சிறிய எலுமிச்சை பழம்
  8. கார்ன் மாவு - 2 தேக்கரண்டி
  9. உப்பு தேவைக்கு.
  10. தவா ப்ரை செய்ய - எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  11. புலாவிற்கு:-
  12. பாசுமதி அல்லது சீரக சம்பா - 400 கிராம்
  13. எண்ணெய் -50 மில்லி
  14. நெய் -2 மேஜைக்கரண்டி
  15. பட்டை-2 துண்டு,ஏலம்,கிராம்பு -தலா3
  16. நறுக்கிய வெங்காயம் -100 கிராம்
  17. தக்காளி -100 கிராம்
  18. பச்சை மிளகாய் -3
  19. இஞ்சி பூண்டு விழுது- 1 மேஜைக்கரண்டி
  20. தேங்காய்ப்பால் -1 கப் + தண்ணீர்
  21. கேரட் -100கி,பச்சை பட்டாணி 50கிராம்.
  22. மல்லி,புதினா சிறிது.
  23. உப்பு - சுவைக்கு சிறிது.

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகள் சுத்தமாக அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.மேற் சொன்ன மசாலா சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற விடவும். அரிசியை அலசி ஊற வைக்கவும்.நறுக்க வேண்டியதை தயார் செய்யவும்.
  2. தவாவில் எண்ணெய் சூடு செய்து மீனை இருபுறமும் சிவற பொரித்து எடுத்து வைக்கவும்.
  3. புலாவ் செய்ய அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்.ஏலம்,பட்டை கிராம்பு சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. இஞ்சி பூண்டு சேர்க்கவும்.சிம்மில் வைத்து வதக்கவும்.தக்காளி,மல்லி,புதினா,கீரிய மிளகாய் சேர்க்கவும்.உப்பு சேர்த்து நல்ல வதக்கவும்.
  5. நறுக்கிய கேரட் ,உரித்த பச்சை பட்டாணி சேர்க்கவும்.சிறிது வேகட்டும்.
  6. 1 கப் தேங்காய்ப்பால், தண்ணீர் இரண்டும் அரிசி அளவிற்கு இரண்டு அளவாக சேர்த்து,உப்பு சரி பார்த்து கொதிக்க விடவும்.
  7. ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
  8. சோறு வெந்து மேல் எழும்பி வரும்.அப்பொழுது பொரித்த மீனை சோறு மேல் பரவலாக வைக்கவும்.
  9. சோறு மீனை மூடுமாறு லேசாக பிரட்டவும். அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் சிக்கென்று மூடி தம் போடவும்.அடுப்பை அணைக்கவும்.
  10. கால் மணி நேரம் கழித்து திறந்து பிரட்டி சூடாக வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.
  11. சுவையான மீன் வெஜ் புலாவ் தயார்.மணக்க மணக்க அப்படியே பிடித்து பிடித்துச் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்