வீடு / சமையல் குறிப்பு / வரகரிசி ஓமசாதம்.

Photo of Ajwain rice by Rajee Swaminathan at BetterButter
736
2
0.0(0)
0

வரகரிசி ஓமசாதம்.

Nov-26-2017
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வரகரிசி ஓமசாதம். செய்முறை பற்றி

அரிசி வகை உணவு 6

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வரகரிசி 100 கி
  2. வறுக்க:
  3. ஓமம் 5 தேக்கரண்டி
  4. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  5. உளுந்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  6. மிளகு, சீரகம் அரை டீஸ்பூன்.
  7. உப்பு தேவைக்கு
  8. தாளிக்க:
  9. கடுகு சிறிதளவு
  10. கடலை பருப்பு சிறிதளவு
  11. நிலக்கடலை சிறிதளவு
  12. வத்தல் 2 கிள்ளியது
  13. கறிவேப்பிலை சிறிதளவு
  14. நல்லெண்ணெய் 5 டீஸ்பூன்
  15. நெய் 1 டீஸ்பூன்
  16. முந்திரி பருப்பு 5

வழிமுறைகள்

  1. வரகரிசியை 2 பங்கு நீர் விட்டு வேக வைக்கவும்.
  2. பின் வறுக்க வேண்டியவற்றை வறுத்து பொடிக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளிக்கவும்.
  4. பின் வடித்த சாதம் மற்றும் பொடியை சேர்த்து கிளறவும்.
  5. பின் நெய்யில் முந்திரி வறுத்துப் போடவும்.
  6. பின் நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.
  7. மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த மதிய உணவாகும்.
  8. செரிமானக் கோளாறுக்கு நல்லது. மேலும் வரகரிசி அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க வல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்