வீடு / சமையல் குறிப்பு / இறால் பிரியாணி

Photo of Prawn 65 Biryani by Mothi Mothi at BetterButter
95
4
0.0(0)
0

இறால் பிரியாணி

Nov-26-2017
Mothi Mothi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் பிரியாணி செய்முறை பற்றி

இறால் பிரியாணிக்கு காரம் தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • தமிழ்நாடு
 • பாய்ளிங்
 • ஃபிரையிங்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பாசுமதி அரிசி-500 கிராம்
 2. இறால் - 500கிராம்
 3. வெங்காயம் - 150கிராம்
 4. தக்காளி - 150கிராம்
 5. பச்சைமிளகாய்-8
 6. பூண்டு-100கிராம்-விழுது
 7. இஞ்சி-100கிராம்-விழுது
 8. புதினா-சிறிது
 9. பட்டை, லவங்கம்-சிறிது
 10. தயிர்-ஒரு கப்
 11. சோம்பு-சிறிது
 12. சோள மாவு 5 தேக்கரண்டி
 13. அரிசி மாவு-4டீ ஸ்பூன்
 14. உப்பு-தேவைக்கு
 15. கேசரி பவுடர்-2சிட்டிகை
 16. எண்ணெய்-தேவைக்கு

வழிமுறைகள்

 1. அரிசி 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.
 2. எண்ணெய் கடாயில் ஊற்றி பட்டை,லவங்கம் சேர்த்து தாளிக்கவும்
 3. அதில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் நறுக்கி வைத்தது,புதினா,தயிர் அனைத்தும் எண்ணையில் சேர்த்து வதக்கவும்
 4. பின்பு ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைக்கவும்
 5. இறால் சுத்தம் செய்ய வேண்டும் .
 6. அதில் உப்பு ,சோல மாவு ,அரிசிமாவு, மிளகாய் பொடி, கேசரி பவுடர், அனைத்தும் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
 7. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்ற, இறால் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்
 8. சாதம் உதிரியாக வரும்போது கேசரி பவுடர் ஒரு சிட்டிகை தூவி மூடி வைக்கவும்
 9. பின்பு வறுத்து வைத்துள்ள இறாலை சாதத்தில் சேர்த்து கலக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும்..
 10. பின்பு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் 65 பிரியாணி ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்