வீடு / சமையல் குறிப்பு / மொச்சை கத்திரிக்காய் மசாலா பாத்

Photo of Mochai -Kathirikkai masala Bath by Sowmya Sundar at BetterButter
870
3
0.0(0)
0

மொச்சை கத்திரிக்காய் மசாலா பாத்

Nov-27-2017
Sowmya Sundar
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மொச்சை கத்திரிக்காய் மசாலா பாத் செய்முறை பற்றி

பச்சை மொச்சை கத்திரிக்காய் சேர்த்து செய்யப்படும் இந்த உணவில் சத்துக்கள் அதிகம் உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை மொச்சை- 1/2 கப்
  2. சீரகசம்பா / சாப்பாடு அரிசி - 1 கப்
  3. தண்ணீர் -2 கப்
  4. எண்ணெய்- 1 கரண்டி
  5. நறுக்கிய கத்திரிக்காய் - 1/2 கப்
  6. வெங்காயம் - 2
  7. பச்சை மிளகாய் -2
  8. இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை -சிறிது
  10. கடுகு - 1 டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
  12. பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
  13. உப்பு
  14. மசாலா பொடி:
  15. கடலைப்பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
  16. கொத்தமல்லிமல்லி விதை- 1 டேபிள் ஸ்பூன்
  17. மிளகாய் வற்றல்- 3
  18. பட்டை- 2 துண்டு
  19. கிராம்பு- 4

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்.
  2. மொச்சையை குக்கரில் தண்ணீர் விட்டு 2 விசில் வரை வேக விடவும்.
  3. அரிசியை தண்ணீர் விட்டு குக்கரில் தனியாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
  4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்
  5. வறுத்து வைத்ததை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் ,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். சிறிது வதங்கியதும் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. பின் வேக வைத்த மொச்சையை சேர்த்து வதக்கவும்.பின்னர் பொடி செய்த மசாலா பொடி சேர்த்து கிளறவும்
  8. கடைசியில் வடித்து வைத்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  9. மசாலா பாத் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்