வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் சாதம்

Photo of Sambhar satham by neela karthik at BetterButter
625
8
0.0(0)
0

சாம்பார் சாதம்

Nov-27-2017
neela karthik
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் சாதம் செய்முறை பற்றி

கர்நாடக ஸ்பெஷலான, லன்ச் பாக்ஸ் ரெசிபி சாம்பார் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  2. உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  3. வெந்தயம் சிறிது
  4. கொத்தமல்லி 1/2 ஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய் 4
  6. தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  7. மிளகு 3
  8. துவரம் பருப்பு 1/4 கப்
  9. அரிசி 1 கப்
  10. கேரட்,முருங்கைகாய், கத்தரிக்காய்,
  11. மற்றும் அவரவர் விரும்பிய காய்கறிகள் 1 கப்
  12. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  13. பெருங்காயம் சிறிது
  14. நெய் 2 ஸ்பூன்
  15. கடுகு 1/2 ஸ்பூன்
  16. புளி கரைசல் 2 மேஜைக்கரண்டி
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. சீரகம் 1/2 ஸ்பூன்
  19. சின்ன வெங்காயம் 10
  20. தக்காளி சிறியது(பொடியாக நறுக்கியது)

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி 4 கப் தண்ணீர் விட்டு 1 பின்ச் உப்பு சேர்த்து சிறிது குழைவாக வேக வைக்கவும்.
  2. அடுப்பில் வெறும் வாணலி வைத்து க.பருப்பு ,உ.பருப்பு,மிளகாய்,கொத்தமல்லி,மிளகு தேங்காய்,வெந்தயம் இவற்றை வறுக்கவும்
  3. இவற்றை ஆற வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும்
  4. காய்கறிகளை கட் பண்ணி நன்றாக கழுவி கொள்ளவும்
  5. அடுத்து வாணலியில் நெய் ஊற்றி கடுகு, மிளகாய்,சீரகம்,பெருங்காயம் தாளிக்கவும்.
  6. பின் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் காய்கறிகளை சேர்க்கவும்.
  7. காய்கறிகள் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்கவும்.
  8. அதில் காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  9. காய்கறிகள் பாதி வெந்ததும் வேக வைத்த அரிசி, பருப்பு கலவையுடன் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்.
  10. 10 நிமிடம் கழித்து இறக்கினால் சாதம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்