வீடு / சமையல் குறிப்பு / மூவகை கீரை புலாவ்

Photo of Tri green pulav by Sowmya Sundar at BetterButter
938
3
0.0(0)
0

மூவகை கீரை புலாவ்

Nov-27-2017
Sowmya Sundar
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மூவகை கீரை புலாவ் செய்முறை பற்றி

மூன்று வகையான கீரைகள் கொண்டு செய்யப்படும் இந்த புலவு சத்தான சுவையான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மகாராஷ்டிரம்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரகசம்பா/பாஸ்மதி அரிசி- 1 1/2 கப்
  2. தண்ணீர் - 3 கப்
  3. நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
  4. பாலக் கீரை- 1/4 கப்
  5. கொத்தமல்லி இலை- 1/4 கப்
  6. புதினா கீரை- 1/4 கப்
  7. பச்சை மிளகாய்- 6
  8. வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
  10. பட்டை,கிராம்பு
  11. பட்டர்/ நெய்- 3 டேபிள் ஸ்பூன்
  12. எலுமிச்சை சாறு- 1/2 டீஸ்பூன்
  13. உப்பு -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் மூன்று வகை கீரை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும் தண்ணீர் விட தேவை இல்லை.
  2. ஒரு கடாயில் நெய் விட்டு கிராம்பு, பட்டை ,பிரிஞ்சி இலை ,வேர்க்கடலை சேர்த்து பின் வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் அரைத்து வைத்த கீரையை சேர்த்து நன்கு வதக்கவும் . தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  4. பின்னர் அரிசியை சேர்த்து நன்கு வறுக்கவும்.
  5. பின் மூன்று கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வேக விடவும். நடுநடுவே கிளறி வெந்த பின் இறக்கி வைக்கவும்.
  6. கடைசியில் எலுமிச்சை சாற்றை கலந்து விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்