வீடு / சமையல் குறிப்பு / எம்ப்டி பிரியானி

Photo of Empty biryani by Rabia Hamnah at BetterButter
633
4
0.0(0)
0

எம்ப்டி பிரியானி

Nov-27-2017
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

எம்ப்டி பிரியானி செய்முறை பற்றி

கறியோ காய்கறியோ இல்லாமல் செய்யக் கூடிய சுலபமான பிரியானி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாஸ்மதி அரிசி-1/2 கி
  2. இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
  3. பெரிய வெங்காயம்-3
  4. தக்காளி-3
  5. பச்சை மிளகாய் -5
  6. தயிர்- 250 கிராம்
  7. மிளகாய் தூள்-2 டேபிள் ஸ்பூன்
  8. மல்லி இலை-2 கொத்து
  9. புதினா -2 கொத்து
  10. நெய்-150
  11. எண்ணெய்-100
  12. பட்டை-2 இன்ச்
  13. ஏலக்காய் -4
  14. பிரியானி இலை-2
  15. எலுமிச்சை-1 சிறியது

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நீள வாக்கில் வெட்டி வைக்கவும். மிளகாயை காம்பை நீக்கி வைக்கவும். அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாதி அவு நெய்+ எண்ணெயை ஊற்றி பட்டை, ஏலம் போடவும். பின்பு கொஞ்சம் வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
  3. நன்கு வதங்கிய பின் மீதமுள்ள வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கிய பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வேகவிட்டு தயிரை சேர்த்து கிளறவும்.
  5. பின்பு மிளகாய் தூள் சேர்க்கவும். பின்பு மல்லி, புதினா இலையை சேர்த்தூமூடி போடவும்.
  6. 10 நிமிடம் கழித்து தண்ணீர் சேர்க்கவும். ஒரு கப் அரிசி என்றால் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. தண்ணீர் நன்கு கொதித்த பின் அரிசியை தட்டி தேவைக்கு உப்பு சேர்த்து கிளறி மூடி விடவும்.
  8. ஐந்து நிமிடம் கழித்து மீதமுள்ள நெய் ஊற்றி எலுமிச்சை சாறு ஊற்றி மிகக் குறைந்த தணலில் 15 நிமிடம் தம்மில் போட்டு இறக்கவும். சுவையான பிரியானி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்