வீடு / சமையல் குறிப்பு / மட்டன் நெய் சோறு

Photo of Mutton ghee rice by Rabia Hamnah at BetterButter
626
4
0.0(0)
0

மட்டன் நெய் சோறு

Nov-27-2017
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் நெய் சோறு செய்முறை பற்றி

பிரியானியை போன்று இல்லாமல் நெய் சோற்றில் கறி வாசனையுடன் ஒரு வகை டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: .
  2. மட்டன்- 1/2 கி .
  3. பல்லாரி - 2
  4. தக்காளி - 2 .
  5. வத்தல் தூள் - 2 ஸ்பூன் .
  6. மஞ்சள் தூள் -1 ஸ்பூன் .
  7. வீட்டு மசலா பொடி- 2 டேபிள் ஸ்பூன்
  8. மிளகு சீரகத் தூள் - 2ஸ்பூன் .
  9. தயிர் - 2 டேபிள் ஸ்பூன் .
  10. மல்லி இலை -1 கொத்து
  11. எண்ணெய்- தாளிக்க .
  12. இஞ்சி பூண்டு விழுது,
  13. பட்டை கருவா- தாளிக்க
  14. நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்: .
  15. அரிசி-1/2 கி ஒரு கப்பில் அளந்து வைக்கவும். .
  16. பல்லாரி - 2 .
  17. மிளகாய்-1 கீறியது .
  18. நெய்-2 டேபிள் ஸ்பூன
  19. தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  20. தேங்காய் பால் - 2கப்
  21. மல்லி, புதினா -2 கைப்பிடி
  22. வறுத்த கிஸ்மிஸ் முந்திரி-5
  23. இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
  24. பட்டை, ஏலம், கருவா- தேவைக்கு
  25. உப்பு- தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும் . எண்ணெய் காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது, பட்டை கருவா, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. பின் பல்லாரி,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மட்டன் உப்பு, தயிர் சேர்த்து வதக்கவும். 20 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
  3. பின் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும். பின் மல்லி இலை சேர்த்து தேவையான உப்பு , தண்ணீர் சேர்த்து4 விசில் வரை வேக விடவும். குறிப்பு: கிரேவி பதத்திர்க்கு வேக விடவும்
  4. நெய் சோறு செய்யும் முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய்,நெய்சேர்த்து சூடு பண்ணவும். பின் இஞ்சி பூண்டு விழுது பட்டை, ஏலம், கருவா, கொஞ்சம் மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
  5. பின் பல்லாரி , மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. பின் தேங்காய் பால் சேர்க்கவும். கொதித்ததும் அரிசி,உப்பு சேர்த்து வேக விடவும்.
  7. முக்கால் பதம் வெந்ததும் மட்டன் கிரேவி மல்லி புதினா சேர்த்து 20 நிமிடம் தம்மில் போடவும்.
  8. வெந்ததும் கிளறி வறுத்த கிஸ்மிஸ் முந்திரி சேர்த்து இறக்கவும் சுவையான மட்டன் நெய் சோறு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்