Photo of Tamarind Rice by Banupriya Jawahar at BetterButter
610
2
0.0(0)
0

புளியோதரை

Nov-28-2017
Banupriya Jawahar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை செய்முறை பற்றி

கட்டுசாத வகைகளுள் முதன்மையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிரியான சாதம் 2 கப்
  2. கொட்டைப்புளி (புதியது) 1 நெல்லிக்காய் அளவு
  3. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி
  4. கடுகு 1/2 தேக்கரண்டி
  5. அ. உ. பருப்பு 1 தேக்கரண்டி
  6. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  7. நிலக்கடலைபருப்பு 1 மேஜைக்கரண்டி
  8. முந்திரி பருப்பு 10
  9. மிளகாய் வற்றல் 5
  10. வறுத்த வெந்தயப்பொடி 1/2 தேக்கரண்டி
  11. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  12. பூண்டு 10
  13. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புளியை வெந்நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கொட்டை நீக்கி கரைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, அ.உ.பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  3. நிலக்கடலை, முந்திரி சேர்த்து வறுக்கவும்.
  4. வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
  5. கரைத்து வைத்திருக்கும் புளிக் கரைசலை சேர்க்கவும்.
  6. உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  7. புளிக்கரைசல் கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  8. (இந்த புளிக்காய்ச்சலை ஒரு வாரம் வரையிலும் வைத்துக் கொள்ளலாம்.)
  9. புளிக்காய்ச்சலில் உதிரியாய் வடித்த 2 கப் சாதத்தை சேர்த்து கிளறி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்