வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சாதம்

Photo of Raw mango rice by Krishnasamy Vidya Valli at BetterButter
1021
3
0.0(0)
0

மாங்காய் சாதம்

Nov-28-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் சாதம் செய்முறை பற்றி

மாங்காயை எப்போதுமே ஊறுகாய்க்கு தான் உபயோகப்படுத்தணுமா சாதமும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சாப்பாடு அரிசி - 1 / 2 கப்
  2. மாங்காய் - 10 முதல் 15 துண்டுகள்
  3. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  4. எள்ளு - 1 / 2 தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 2
  6. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  7. கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  8. வெல்லப்பொடி - 2 தேக்கரண்டி
  9. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  10. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி மிளகாய் வத்தல் - 1 கறிவேப்பிலை - 2 ஆர்க்கு பெருங்காயம் - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம்பருப்பு மிளகாய் வத்தல் கட்டி பெருங்காயம் எள்ளு சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
  2. அதோடு சேர்த்து மாங்காய் துண்டுகள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கிக்கலாம்
  3. எல்லாவற்றையும் தேங்காய் துருவல் வெல்லப்பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக அரைக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்
  6. விட்ட எண்ணெய் மேலே வரும்நிலையில் அடுப்பைஅணைத்துவிடவும்
  7. சாப்பாடு அரிசியை தேவையானஅளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்
  8. வெந்ததும் ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்
  9. வதக்கியதுடன் சாதம் சேர்த்து கிளறவும்
  10. எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை மிளகாய் வத்தல் பெருங்காயம் தாளித்து சேர்த்தால் அருமையான மாங்காய் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்