வீடு / சமையல் குறிப்பு / அரிசி, பருப்பு,கறி நோன்பு கஞ்சி

Photo of Nonbu kanji with mutton keema by Rabia Hamnah at BetterButter
1104
3
0.0(0)
0

அரிசி, பருப்பு,கறி நோன்பு கஞ்சி

Nov-28-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி, பருப்பு,கறி நோன்பு கஞ்சி செய்முறை பற்றி

ரமலான் நோன்பு கஞ்சி நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவில் ரமலான் கஞ்சி மிக முக்கிய உணவாகும்… இது செய்வதும் மிகவும் சுலபம்..

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பண்டிகை காலம்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி – ஒரு கப் ( பாஸ்மதி அரிசி (அ) பொன்னி)
  2. கொத்து கறி-1/4 கி
  3. சிறு பருப்பு / பாசி பருப்பு – அரை கப்
  4. மஞ்சள்தூள் – 2டீ ஸ்பூன்
  5. மசலாதூள் – 5 டேபில் ஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு
  7. புதினா, மல்லி, ரம்பை இலை – தேவையான அளவ
  8. பல்லாரி – 2
  9. தக்காளி – 3
  10. கேரட் – 1
  11. முட்டைக்கோஸ் – 1/4 பகுதி
  12. பீன்ஸ் – 5
  13. உருளைகிழங்கு – 1
  14. தேங்காய் பால் – 2 கப்
  15. தாளிக்க:
  16. இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
  17. நெய் -100, எண்ணெய் – 50 மில்லி
  18. தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
  19. பச்சை மிளகாய் – 2
  20. பட்டை – 2 பெரியது கிராம்பு – 2 ஏலக்காய் – 6
  21. கருவேப்பிலை – சிறிதளவு

வழிமுறைகள்

  1. பாசி பருப்பை இலேசாக வறுத்து, அவற்றுடன் அரிசியைக் கலந்து 20 நிமிடம் ஊற வைத்து நன்றாக அலசிய பின்பு அதில் மஞ்சள்தூள், மசாலாத்தூள், உப்பு, புதினா, மல்லி இலைகள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
  2. சாதம் நன்றாக குழைய வெந்தபின் அதனை நன்றாக் ஆற வைத்து தேவைக்கு சிறுது தண்ணீர் சேர்த்து மத்தை வைத்து கடையவும்.
  3. குக்கரில் நெய் , எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்
  4. பிறகு அதில் நறுக்கிய காய்கறிகளுடன் புதினா, மல்லி, கறி துண்டுகள் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக மசிய வேக வைத்து எடுக்கவும்.
  5. வேக வைத்த கறி மற்றும் காய்கறி கலவை நன்றாக வெந்த பின்பு ப்ளண்டரில் விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
  6. அடி கனமான சட்டியில் கடைந்த சாதம் மற்றும் கறி, காய்கறி விழுது சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி குறைந்த தணலில் சூடு செய்யவும். அடி பாகம் பிடித்து விடாத வண்ணம் இடையில் கிளறி விடவும்.
  7. சிறுது கஞ்சி கொதிக்கும் பொழுது தேங்காய்பால் ஊற்றி மீண்டும் சூடு செய்யவும். கடைசியாக சிறுது பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பினை அணைக்கவும்.. சூடான சுவையுடன் கூடிய நோன்புக் கறிக்கஞ்சி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்