வீடு / சமையல் குறிப்பு / அரேபிய சிக்கன் கப்ஸா சோறு

Photo of Arabian chicken kapsa rice by Asiya Omar at BetterButter
2464
7
0.0(0)
0

அரேபிய சிக்கன் கப்ஸா சோறு

Nov-28-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரேபிய சிக்கன் கப்ஸா சோறு செய்முறை பற்றி

அரபு நாட்டில் இந்த சோறு மிகவும் பிரசித்தம்,மணக்க மணக்க மிருதுவாக அதிக காரமில்லாமல் மிகவும் சத்தானதாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் குவார்டர் துண்டுகள் -4 (600 - 800 கிராம்)
  2. பாசுமதி அரிசி -400 கிராம்
  3. சிக்கன் ஸ்டாக் எடுக்க:-
  4. தண்ணீர் - 4 கப்
  5. ஏலம் பட்டை கிராம்பு - தலா 3 எண்ணம்
  6. பிரியாணி இலை -2
  7. உப்பு - தேவைக்கு.
  8. கப்ஸா தயாரிக்க:-
  9. எண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
  10. வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  11. பொடியாக நறுக்கிய வெங்காயம் - மீடியம் சைஸ் -1
  12. ஒரு பெரிய தக்காளி - அரைத்தது
  13. மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி,பூண்டு - தலா ஒரு மேஜைக்கரண்டி
  14. (இஞ்சி விரும்பினால் சேர்க்கலாம்)
  15. கேரட் துருவல் - 1
  16. மசாலா தேவையானது:-
  17. மிளகுப் பொடி - 1/2 தேக்கரண்டி
  18. சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
  19. பட்டைத்தூள் - 1/4 தேக்கரண்டி
  20. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  21. சாப்ரான் - 2 நுள்ளு
  22. காய்ந்த எலுமிச்சை -1
  23. உப்பு - தேவைக்கு.
  24. கேரட் துருவல் -1
  25. உப்பு - தேவைக்கு
  26. அலங்கரிக்க நெய்யில் வறுத்த முந்திரி,பாதாம்.

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு பட்டை,ஏலம்,கிராம்பு,பிரியாணி இலை போட்டு கொதிக்க விடவும் உப்பும் சுவைக்குச் சேர்க்கவும்.
  3. சிக்கன் சேர்த்து மூடி 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.சிக்கன் வெந்து வரட்டும்.
  4. அரிசி ஊற வைக்கவும்.கால் மணி நேரம் கழித்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
  5. மசாலா பொருட்கள் தயாராய் எடுத்து வைக்கவும்.
  6. அலங்கரிக்க சிறிது நெய்யில் வறுத்த முந்திரி,பாதாம் எடுத்து வைக்கவும்.
  7. கப்ஸா சோறு ஆக்க ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் ,வெண்ணெய் சேர்க்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  8. ஸ்டாக் எடுத்த சிக்கன,சிறிது உப்பு் மட்டும் சேர்க்கவும்.
  9. நன்கு பிரட்டி விட்டு தக்காளி விழுது சேர்க்கவும்
  10. துருவிய கேரட் சேர்க்கவும்.
  11. மசாலா வகைகள் சேர்க்கவும்.
  12. மெதுவாகப் பிரட்டவும்.
  13. எடுத்து வைத்த சூடான சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும்.அரிசி சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்
  14. அரிசி வெந்து மேலே வரும்.
  15. பாத்திரத்தை சிக்கென்று மூடி தம்மில் விடவும்.
  16. 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து பக்குவமாகப் பிரட்டவும்
  17. ஒரு ப்லேட்டில் சிக்கன் கப்ஸா சோறு வைத்து வறுத்த முந்திரி பாதாம் மேலே தூவி அலங்கரிக்கவும்.
  18. சுவையான சூடான ஆவி பறக்கும் சிக்கன் கப்ஸா தயார். இதனை சாலட், தக்காளிப் பச்சடியுடன் பரிமாறவும்.பொன்னிறமாக வறுத்த வெங்காயம் கூட மேலே தூவலாம்.
  19. சிக்கனை தோலோடு ஸ்டாக் எடுத்து விட்டு லேசாக விருப்ப மசாலா தடவிகிரில் செய்தும் கப்ஸாவுடன் பரிமாறலாம். ஒரு முறை அப்படியும் செய்து பார்த்தேன்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்