Photo of Japanese rice ice cream by Adaikkammai Annamalai at BetterButter
694
8
0.0(2)
0

Japanese rice ice cream

Nov-28-2017
Adaikkammai Annamalai
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஜப்பானிய
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரைஸ் மில்க் - 500 ml
  2. சர்க்கரை - 50 gm
  3. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 2 தேக்கரண்டி
  4. கார்ன் மாவு. - 1 தேக்கரண்டி
  5. ரைஸ் மில்க் ஸ்டோர்கலில் கிடைக்கும் ஆனால் வீட்டிலே தயாரிக்கலாம் எப்படி என்று கீழே செய்முறையுள் பார்க்கவும் தேவையான பொருட்கள் ரைஸ் மில்க்கிற்கு

வழிமுறைகள்

  1. ரைஸ் மில்க் முதலில் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் காய்ச்சிய பால் - 2 கப் , வேகவைத்த குழைவான ஒயிட் ரைஸ் (அல்லது) ப்ரௌன் ரைஸ் - 1 கப் , தேன் - 2 தேக்கரண்டி
  2. 1 கப் காய்ச்சிய பாலில் வேகவைத்த 1 கப் சாதத்தை சேர்த்து நன்கு மசித்து 2 தேக்கரண்டி தேன் விட்டு, சிம்மில் நன்றாக விஸ்க் செய்யவும். அந்த ரைஸ் மில்க் கெட்டியாக வரும் வரை விஸ்க் செய்யவேண்டும்.
  3. பிறகு தேவையான சர்க்கரையை கொட்டி கிளற வேண்டும். கிளறிய பின் ஆற வைக்கவும்.
  4. அப்படி சாதம் கரையாமல் இருந்தால் ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்து கொள்ளுங்கள். இது தான் ரைஸ் மில்க் .
  5. அதன் பின் 1 தேக்கரண்டி கார்ன் மாவு எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து அதை ரெடி செய்த ரைஸ் மில்க்யில் கலக்கவும்.
  6. அதில் 2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் ஊற்றி நன்றாக விஸ்க் செய்ய வேண்டும்
  7. பிறகு அதை ஒரு பௌலில் கொட்டி பிரீஸரியில் 8 மணி நேரம் வைக்கவும்.
  8. பிறகு அதை எடுத்து ஐஸ் கிரீம் பௌலில் போட்டு பிடித்த டாப்பிங்க்ஸை மேலே வைத்து சுவைக்கலாம்
  9. சுவையான ஆரோக்கியமான ஜெபனீஸ் ஐஸ் கிரீம் தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
farhuraaz Peer
Sep-18-2018
farhuraaz Peer   Sep-18-2018

Kalyani
Nov-28-2017
Kalyani   Nov-28-2017

Good for health thanks

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்