வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் கீரை சாதம்

Photo of Moringa Rice by Jasmin Sheik at BetterButter
1007
4
0.0(0)
0

முருங்கைக் கீரை சாதம்

Nov-28-2017
Jasmin Sheik
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக் கீரை சாதம் செய்முறை பற்றி

இது ஒரு சத்து நிறைந்த சாதம்.. முருங்கை இலையின் கசப்பு தன்மை இதில் சிறிதும் தெரியாததால் குழந்தைகளும் விரும்பி உண்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எண்ணெய் 1 மேசைக்கரண்டி
  2. நெய் 1 மேசைக்கரண்டி
  3. கிராம்பு 4
  4. கருவாப்பட்டை 1
  5. ஏலக்காய் 4
  6. முருங்கை கீரை 1 1/2 கப்
  7. வெங்காயம் பெரிது 1
  8. தக்காளி 1
  9. பச்சைமிளகாய் 2
  10. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  12. பெருஞ்சீரக தூள் 1 தேக்கரண்டி
  13. அரிசி (சாதா) 2 கப்
  14. தேங்காய் பால் 1 1/2 கப்
  15. மல்லி இலை சிறிது
  16. தண்ணீர் 3 1/2 கப் ( 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் ,தேங்காய் பால் அளவையும் சேர்கவும்)
  17. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு கிராம்பு, கருவாப்பட்டை ,ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை வதக்க வேண்டும்
  2. அதனுடன் முருங்கை கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. பச்சைவாசனை போனதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும்
  4. அதனுடன் தேங்காய் பால் மற்றும் சரியான அளவு தண்ணீர் , மஞ்சள், பெருஞ்சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதித்ததும் அரிசி சேர்த்து வேக விடவும்.
  5. நன்றாக வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்