வீடு / சமையல் குறிப்பு / அரிசி கீர் ஸ்ட்ராபெரி ஐஸ் கிரீம்

Photo of Rice keer strawberry ice cream by saranya sathish at BetterButter
848
3
0.0(0)
0

அரிசி கீர் ஸ்ட்ராபெரி ஐஸ் கிரீம்

Nov-29-2017
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
300 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரிசி கீர் ஸ்ட்ராபெரி ஐஸ் கிரீம் செய்முறை பற்றி

பாசுமதி அரிசி பால் ஸ்ட்ராபெரி சேர்த்து செய்த ஐஸ் கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசுமதி அரிசி - 1 சிறிய கப்
  2. சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
  3. பால் - 2 கப்
  4. ஸ்ட்ராபெரி - 6
  5. முந்திரி திராட்சை

வழிமுறைகள்

  1. பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாலை சேர்க்கவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும் அரிசி சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  3. அரிசியை பாலில் நன்றாக வேகவிடவும். தேவை எனில் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  4. அரிசி நன்றாக வெந்ததும் சிறிது திராட்சை முந்திரி சேர்த்து கலந்து ஆரவிடவும். இப்போது கீர் ரெடி.
  5. பின் சிறிது பால் சேர்த்து கொரகொரபாக அரைக்கவும்.
  6. ஸ்ட்ராபெரியை துண்டுகளாக கட் செய்து சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  7. ஐஸ் கிரீம் மோல்டை எடுத்து முதலில் ஸ்ட்ராபெரி விழுதை சேர்த்து மூடி போட்டு 2 மணி நேரம் ப்ரீசரில் சேட் செய்யவும்.
  8. பின் அதற்கு மேல் அரைத்து வைத்த அரிசி கீர் சேர்த்து மூடி போட்டு மேலும் 2 மணி நேரம் செட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்