தவா பூண்டு வெண்ணெய் நான் | Tawa Garlic Butter Naan in Tamil

எழுதியவர் Moumita Malla  |  20th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Tawa Garlic Butter Naan by Moumita Malla at BetterButter
தவா பூண்டு வெண்ணெய் நான்Moumita Malla
 • ஆயத்த நேரம்

  90

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

6090

0

தவா பூண்டு வெண்ணெய் நான் recipe

தவா பூண்டு வெண்ணெய் நான் தேவையான பொருட்கள் ( Ingredients to make Tawa Garlic Butter Naan in Tamil )

 • மாவு - 2 கப் + 2 தேக்கரண்டி (துவலுக்கு)
 • வெதுவெதுப்பான தண்ணீர் - 1/2 கப் + மாவு பிசைவதற்கு
 • ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
 • சர்க்கரை - 1 தேக்கரண்டி
 • தயிர் - 2 தேக்கரண்டி
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • கருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
 • கொத்துமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
 • பூண்டு - 1/4 கப் (நறுக்கியது)
 • வெண்ணெய் - 2 தேக்கரண்டி
 • உப்பு - சுவைக்கேற்றபடி

தவா பூண்டு வெண்ணெய் நான் செய்வது எப்படி | How to make Tawa Garlic Butter Naan in Tamil

 1. 1 தேக்கரண்டி ஈஸ்ட் 1 தேக்கரண்டி சர்க்கரையை 1/2 கப் வெதுவெதுப்பான நீரில் சேர்க்கவும்.
 2. நன்றாகக் கலந்து 10 நிமிடங்களுக்கு வைக்கவும்
 3. ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில், 2 கப் மாவு ஒரு சிட்டிகை உப்பு எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும், ஈஸ்ட் கலவை, தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 4. மாவுக் கலவையை உங்கள் கைகளால் பிசைந்துகொள்ளவும், பிசையும் போது தேவைப்பட்டால் அதிகமாக வெந்நீர் சேர்த்துக்கொள்ளவும்.
 5. இப்போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் பிசைந்துகொள்ளவும்.
 6. நான் மாவை ஈரமான சமையல் துண்டால் மூடி வெப்பமான இடத்தில் 1ல் இருந்து 1.5 மணி நேரம் வைக்கவும். ஈஸ்ட் வினைபுரிய ஆரம்பித்ததும் மாவு இரட்டிப்பாகிவிடும்.
 7. 1 மணி நேரத்திற்குப் பிறகு, கொஞ்சம் மாவை பிசைந்த மாவின் மீது தெளித்து 1 நிமிடம் பிசையவும். இப்போது நான் மாவை தோராயமாக சம அளவுள்ள உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
 8. பூண்டு, கருஞ்சீரகம், கொத்துமல்லியை ஒரு பாத்திரத்தில் மேலே வைப்பதற்குக் கலந்துகொள்ளவும்.
 9. தவாவை அடுப்பில் வைத்து உயர் தீயில் தவாவை சூடுபடுத்தவும்.
 10. ஒரு சமதளப் பரப்பில் ஒவ்வொரு உருண்டையையும் எடுத்துக்கொள்ளவும். நீங்கள் சமையல் மேடையை அல்லது உருட்டுப் பலகையைப் பயன்படுத்தலாம். (தேவைப்பட்டால் மாவைத் தெளித்துக்கொள்ளவும்), அருமையான வடிவத்தில் மாவை உருட்டிக்கொள்ளவும்.
 11. 1 தேக்கரண்டி பூண்டு, கொத்துமல்லி, கருஞ்சீரகக் கலவையை எடுத்து நானின் ஒரு பக்கத்தில் பரப்பவும்.
 12. உருட்டைக் கட்டையால் ஒரு முறை உருட்டி அனைத்துச் சேர்வைப் பொருள்களையும் உருட்டவும்.
 13. நானைத் திருப்பிப்போட்டு, கைகளால் கொஞ்சம் தண்ணீர் இடவும்.
 14. நானை சூடானத் தவாவில் ஈரப்பகுதி கீழாகவும் பூண்டுப்பகுதி மேலாகவும் வைக்கவும். கைகளால் அல்லது கரண்டியால் தவாவில் ஒட்டும் அளவிற்கு அழுத்தவும். சில நொடிகள் அல்லது குமிழ்கள் நானில் தோன்றும்வரை சமைக்கவும். நான் தவாவில் ஒட்டிக்கொள்ளும்.
 15. நானை வைத்து தண்ணீர் பக்கத்தில் சூடான தவாவில் ஒட்டவைக்கவும். சில நொடிகள் நான் வேகட்டும்.
 16. தவாவைத் தலைகீழாக தீயில் திருப்பி தவாவைக் கவனமாகத் தீயில் நகர்த்தவும் நானில் பொன்னிறப் புள்ளிகள் தோன்றும்வரை.
 17. பூண்டு நானை ஒரு கரண்டியால் எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து கொஞ்சம் வெண்ணெய் விடவும். மீதமுள்ள நான் உருண்டைகளை மேல் கூறிய வழிமுறையில் செய்யவும்.
 18. பரிமாறி மகிழவும்!

எனது டிப்:

நான் பூண்டு, கருஞ்சீரகம், கொத்துமல்லியை மேலே வைப்பதற்குப் பயன்படுத்தினேன். உங்களுக்கு வேண்டுமென்றால் எந்த டாப்பிங்கையும் பயன்படுத்தி எளிமையான நானை மகிழலாம்.

Reviews for Tawa Garlic Butter Naan in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.