வீடு / சமையல் குறிப்பு / ரைஸ் டோனட்ஸ் வித் டேட்ஸ் அன்டு ஹனி

Photo of Rice Doughnuts with Dates and Honey by Sowmya Sundar at BetterButter
447
1
0.0(0)
0

ரைஸ் டோனட்ஸ் வித் டேட்ஸ் அன்டு ஹனி

Nov-29-2017
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரைஸ் டோனட்ஸ் வித் டேட்ஸ் அன்டு ஹனி செய்முறை பற்றி

குழைந்த சாதத்தில் செய்யப்படும் இந்த டெசர்டில் சுவையும் ,டேட்ஸ் சேர்க்கப்படுமவதால் சத்தும் உள்ளது.மைதாவிற்கு பதிலாக கோதுமை மாவில் செய்துள்ளேன் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குழைத்து வடித்த சாதம்- 1 கப்
  2. கோதுமை மாவு- 1 கப்
  3. பால் -1/4 கப்
  4. சர்க்கரை - 1/2 கப்
  5. எண்ணெய்- பொரிக்க
  6. பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்
  7. வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
  8. பட்டர்- 1 டேபிள் ஸ்பூன்
  9. டாப்பிங் செய்ய:
  10. டேட்ஸ் - 15
  11. தேன்- 5 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பால்,வெண்ணெய்,வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் நன்கு மசித்த சாதம்,கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் மாவு ஒட்டினால் சிறிது கோதுமை மாவை சேர்த்து கொள்ளலாம் .
  3. மாவை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. பொரித்ததை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  6. டாப்பிங் செய்ய: டேட்ஸ் மற்றும் தேனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  7. டோனட்ஸின் மேல் டாப்பிங்கை நன்றாக தடவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்