வீடு / சமையல் குறிப்பு / கோவா கொண்டைக்கடலை( கொண்டைக்கடலை) மசாலா

Photo of Goan chole ( chickpea) xacuti by Freda Dias at BetterButter
6680
96
4.7(0)
0

கோவா கொண்டைக்கடலை( கொண்டைக்கடலை) மசாலா

Jan-20-2016
Freda Dias
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கோவா
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 கப் உலர்ந்த கொண்டைக்கடலை
  2. அரைப்பதற்கு தேவையான பொருள்கள்:
  3. 1 கப் புதிதாக துருவிய தேங்காய்
  4. 3-4 காஷ்மீரி சிகப்பு மிளகாய்
  5. 1/4 கப் கொத்தமல்லி விதை
  6. 5 பெரிய மிளகு/15 சிறிய மிளகு
  7. 5-6 கிராம்பு
  8. 4-5 பச்சை ஏலக்காய்
  9. 1 நட்சத்திர சோம்பு
  10. 1 ஜாதி காய்
  11. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  12. 1 தேக்கரண்டி கசகசா
  13. 2 அங்குல இலவங்கப்பட்டை
  14. தாளிப்பதற்கு:
  15. 1 டீக்கரண்டி] கடுகு
  16. 2 தேக்கரண்டி காய்கறி எண்ணெய்
  17. பிற தேவையான பொருட்கள்:
  18. 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  19. 1 கொத்து கறிவேப்பிலை, சுமாராக 10-15 இலைகள்
  20. சுவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை நன்கு கழுவி போதுமான தண்ணீரில் முழு இரவு ஊறவைக்கவும். மறுநாள் காலையில் கொண்டைக்கடலையை போதுமான தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து மென்மையாக வேகவிடவும், ஆனால் சற்று கடினமாகவே இருக்க வேண்டும்.
  2. வாணலியில் சிறு துளிகள் எண்ணெய் விட்டு மிதமான வெப்பத்தில் வெங்காயத்தை வதக்கவும், வெங்காயம் வதங்கியவுடன் துருவிய தேங்காயை அதனுடன் சேர்த்து மேலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். பின் அடுப்பிலிருருந்து இறக்கி தனி பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
  3. அதன் பிறகு அதே வாணலியில் கொத்தமல்லி விதை சேர்த்து குறைவான வெப்பத்தில் மணம் வரும் வரை வறுக்கவும்.
  4. பிறகு சிகப்பு மிளகாய், மிளகு, கிராம்பு, பச்சை ஏலக்காய், நட்சத்திர சோம்பு(இதழ்களில் இருந்து விதைகளை நீக்கவும் இல்லையென்றால் அது குழம்பை கசப்பானதாக்கிவிடும்),ஜாதிக்காய், பெருஞ்சீரகம், கசகசா ஆகியவற்றை சேர்த்து மேலும் 2-3 நிமிடம் வறுக்கவும், ஆனால் மசாலாப் பொருள்களை கருகவிட கூடாது .
  5. வருத்த வெங்காயம் மற்றும் தேங்காயையும் அதனுடன் வருத்த மசாலாப் பொருள்களை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு (1 கப் வரை ஊற்றலாம்) நன்கு பசை போன்று அரைக்கவும்.
  6. அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் இட்டு வெப்பப்படுத்தவும்பி, பின் அதில் கடுகு சேர்த்து பொரிய விடவேண்டும்.
  7. அதன் பின் அரைத்து வைத்த மசாலாப் பொருள்களை கடுகு மற்றும் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  8. அதில் கருவேப்பிலை மற்றும் மஞ்சள்தூளை மசாலாவுடன் சேர்த்து எண்ணெய் மற்றும் கருவேப்பிலை நீங்காமல் கொதிக்க விடவும்.
  9. அத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அரைவை பாத்திரத்தில் மசாலா எஞ்சி இருக்காதவாறு அதையும் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்துக் கொண்டு அதை வாணலியில் சேர்க்கவும்.
  10. குழம்பில் தேவையான கெட்டி தன்மைக்கு இருப்பதற்கு சிறிது அதிகமான அளவில் தண்ணீர் கலந்து கொள்ளலாம். இதை 5 நிமிடம் வேகவிடவும். சிறிது நேரத்திற்கு பிறகு சுவையை சரிப்பார்த்து, தேவைக்கேற்றவாறு சரி செய்து கொள்ளவும். சூடான சாதத்துடன் இதை பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்