Photo of Malabar Ghee Rice by Asiya Omar at BetterButter
787
5
0.0(1)
0

Malabar Ghee Rice

Nov-30-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கேரளா
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சீரக சம்பா அரிசி -1 கப்
  2. நெய் -2 மேஜைக்கரண்டி
  3. முந்திரி & கிஸ்மிஸ் - தலா 10
  4. ஏலம்-3,பட்டை-1,கிராம்பு-3
  5. பிரியாணி இலை -1
  6. நறுக்கிய பெரிய வெங்காயம் -1
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  8. கொதிக்கும் நீர் -2 கப்
  9. உப்பு - தேவைக்கு.
  10. நறுக்கிய மல்லி இலை விரும்பினால் சிறிது.

வழிமுறைகள்

  1. அரிசியை நன்கு அலசி தண்ணீர் வடித்து விட்டு திரும்ப ஊற வைக்கவும்.
  2. அடிகனமான பாத்திரத்தில் நெய் சூடு செய்யவும்.முதலில் முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்.
  3. அதன் பின் பொன்னிறமாக வெங்காயம் வறுத்து எடுக்கவும்.
  4. அதே நெய்யில் ஏலம்,பட்டை,கிராம்ப,பிரியாணி இலை போடவும். சிறிது முந்திரி பருப்பு,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும். பின்பு அரிசி சேர்த்து பிரட்டவும்.
  5. பின்பு கொதிக்கும் நீரும,உப்பும் சுவைக்குச் சேர்க்கவும்.
  6. உப்பு சரி பார்க்கவும்.
  7. அரிசி வெந்து வரும்.மூடி வைக்கவும்.புழுங்கியவுடன் அடுப்பை அணைக்கவும்.
  8. தம் ஆனவுடன் திறந்து வறுத்த முந்திரி கிஸ்மிஸ் ,வெங்காயம், மல்லி இலை அலங்கரிக்கவும்.இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  9. பிரட்டி விட்டு பவுலில் எடுத்து சிக்கன் அல்லது மட்டன் கறியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
பிரசன்னா பிரசன்னா NT
Dec-28-2017
பிரசன்னா பிரசன்னா NT   Dec-28-2017

அக்கா,காரத்திர்கு பச்சைமிளகாய் தேவையில்லையா?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்