வீடு / சமையல் குறிப்பு / கொண்டகடலை பிரியானி

Photo of Chickpea biryani by Rabia Hamnah at BetterButter
45
3
0.0(0)
0

கொண்டகடலை பிரியானி

Nov-30-2017
Rabia Hamnah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டகடலை பிரியானி செய்முறை பற்றி

மிகச் சத்து நிறைந்த கொண்டகடலை குழந்தைகள் விரும்புவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் உண்பார்கள். லன்ச் பாக்ஸ்ற்கு ஏற்ற ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி-2 கப்
  2. வேக வைத்த கொண்டகலை-1 கப்
  3. இஞ்சி பூண்டு விழுது-1/2 டேபிள் ஸ்பூன்
  4. பல்லாரி-3
  5. தக்காளி-3
  6. ப.மிளகாய்-3
  7. கொத்தமல்லி, புதினா-1/2 கட்டு
  8. தயிர்-3/4 கப்
  9. எலுமிச்சை சாறு-1/2 பழத்தில் பிழிந்தது
  10. மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
  11. மிளகாய் தூள்-2 ஸ்பூன்
  12. மிளகுத் தூள்-1/2 ஸ்பூன்
  13. சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
  14. நெய்- 1/2 டேபிள் ஸ்பூன்
  15. தேங்காய் எண்ணெய்-1/2 டேபிள் ஸ்பூன்
  16. ஏலம்-3
  17. பட்டை-2 இன்ச்
  18. கருவா-2

வழிமுறைகள்

  1. அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்+ நெய் விட்டு காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலம், கருவா சேர்த்து தாளிக்கவும்.
  2. பின்பு வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் மசிந்ததும் தக்காளி சேர்த்து, தயிர் சேர்க்கவும்.
  3. பின்பு மிளகாய் மற்றும் தூள் வகைகளை சேர்த்து கொண்டகடலையை சேர்க்கவும் 2 நிமிடம் கழித்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. நன்கு கொதித்ததும் அரிசியை தட்டி தேவைக்கு உப்பு சேர்த்து மல்லி, புதினா சேர்க்கவும்.
  5. 3/4 பதம் வெந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து 20 நிமிடம் தம்மில் போட்டு கிளறி இறக்கி விருப்பப்பட்ட சைடிஷ் உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்