வீடு / சமையல் குறிப்பு / நவதானிய சாதம்

Photo of Multigrain rice by Rajee Swaminathan at BetterButter
657
3
0.0(0)
0

நவதானிய சாதம்

Nov-30-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நவதானிய சாதம் செய்முறை பற்றி

அரிசி வகை சாதப்போட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசுமதி அரிசி 100 கி
  2. ஊறவைக்க:
  3. பாசிப்பயிறு 2 டீஸ்பூன்
  4. கொண்டைக்கடலை 2 டீஸ்பூன்.
  5. உளுந்து 2 டீஸ்பூன்.
  6. கானம் 2 டீஸ்பூன்.
  7. நிலக்கடலை 2 டீஸ்பூன்
  8. எள் 2 டீஸ்பூன்
  9. கோதுமை 2 டீஸ்பூன்
  10. தாளிக்க:
  11. தேங்காய் எண்ணெய்
  12. நெய்
  13. கடுகு உ.பருப்பு 1 டீஸ்பூன்
  14. வத்தல் 2 கிள்ளியது
  15. கருவேப்பிலை
  16. முந்திரி பருப்பு
  17. தேங்காய் பூ 2 டீஸ்பூன்
  18. உப்பு தேவையான அளவு.
  19. மிளகுப்பொடி அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசுமதி அரிசியை வேக வைத்து உலர வைக்கவும்.
  2. ஊற வைக்க வேண்டிய தானியங்களை முந்தய நாள் இரவே ஊற வைக்கவும்.
  3. பின் வெள்ளைத்துணியில் கட்டி 2 மணி நேரம் கழித்து எடுத்தால் முளை கட்டியிருக்கும்.
  4. பின் இவற்றை பிளாஸ்கில் வெந்நீர் ஊற்றி அரை மணி நேரம் வைக்கவும். ( அவித்தால் சத்தை இழக்க நேரிடும்)
  5. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு , கிள்ளிய வத்தல், போட்டு தாளித்து பிளாஸ்கில் ஊற வைத்த தானியங்களை போட்டு வதக்கவும்.
  6. பின் உப்பு, தேங்காய் தூவி சிறிது மிளகுப்பொடி தூவி கிளறவும்.
  7. பின் வேக வைத்த சாதத்தைப் போட்டு கிளறவும்
  8. பின் நெய்யில் முந்திரி வறுத்துப் போடவும்.
  9. பின் நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.
  10. இந்த மழைக்காலத்துக்கேற்ற சத்தான மதிய உணவாகும்.
  11. முளைகட்டிய தானியங்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  12. மிளகு மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு நல்லது.
  13. மழைக்கால டெங்கு காய்ச்சலுக்கு காரணமான வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க வல்லது.
  14. சிறந்த, ஆரோக்கியமான புரதச் சத்து நிறைந்த அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மதிய உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்