வீடு / சமையல் குறிப்பு / Fish ball with egg cutlet semi gravy

Photo of Fish ball with egg cutlet semi gravy by Adaikkammai Annamalai at BetterButter
775
13
0.0(2)
0

Fish ball with egg cutlet semi gravy

Nov-30-2017
Adaikkammai Annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Fish ball with egg cutlet semi gravy செய்முறை பற்றி

இது மிக வித்தியாசமான , சுவையான ஒன்று ... இதனுடைய சிறப்பு என்னவென்றால் பிஷ் பாலை வைத்து செய்வது மற்றும் முட்டையை வேகா வைத்து அதை கட்லெட் போட்டு அதை அரைத்த மசலாவில் பிரட்டி எடுப்பது தான்..

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 2
  2. தக்காளி. : 1
  3. முட்டை கட்லெட் : தேவையான பொருட்கள்.. முட்டை -4 .., மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.. சீரகத்தூள் -1 ஸ்பூன் ... பால் - 2 ஸ்பூன் ... சீனி - 1 ஸ்பூன் .....
  4. பிஷ் பால். : 1 பாக்கெட் ( பிஷ் பால் அனைத்து சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் பிரோஸன் செய்யப்பட்டு இருக்கும் பாக்கெட்டில் .., அதை வாங்கி சூடு தண்ணீரில் போட்டு எடுத்து வடிகட்டி பொறித்து அல்லவேண்டும்..,அப்படி கிடைக்கவில்லை என்றால் முல் இல்லாத மீன் வாங்கி அதை ஆவியில் வேக வைத்து அதை பாலாக உருட்டி எண்ணையில் பொரித்து செய்யலாம்.
  5. கடுகு. : 1/2 ஸ்பூன்
  6. எண்ணெய் : தேவையான அளவு
  7. அரைத்து வைக்கவேண்டிய மசாலா வரமிளகாய் : 6 தேங்காய் : 1 ஸ்பூன். சோம்பு. : சிறிதளவு இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

வழிமுறைகள்

  1. முதலில் முட்டை கட்லெட் செய்வதற்கு தயார் செய்ய வேண்டியவை.., ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊத்தி அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு , 1 ஸ்பூன் மிளகாய் தூள்., 2 ஸ்பூன் பால் ., மஞ்சத்தூள் ஒரு ஸ்பூன்., சீரகத்தூள் 1 ஸ்பூன்.,சீனி - 1 ஸ்பூன் ... சீனி சேர்த்தால் கவுச்சி இருக்காது திகட்டாது , உப்பு சிறிதளவு.
  2. இவை அனைத்தையும் நன்றாக விஸ்க் செய்யவும். பிறகு ஒரு சில்வர் பௌல் எடுத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு முழுவதுமாக எண்ணெய் தடவவேண்டும் அப்பொழுதுதான் முட்டை ஒட்டாமல் கேக்கா ஆக வரும் .
  3. எண்ணெய் தடவிய அந்த பாத்திரத்தி்ல் விஸ்க் செய்து எடுத்து வைத்த முட்டை கலவையை அதில் ஊத்தி குக்கரில் 1 சவுண்ட் 5 நிமிடம் வைத்து இறக்ககவும். அதை எடுத்து ஆற வைத்து அதன் பின் அதை சின்னமாக கட்செய்து எடுத்து கொள்ளவும்
  4. அதன் பின் பிஷ் பால் எடுத்து நன்றாக கழுவி அதை எண்ணையில் பொன்னிரமாக பொரித்து எடுத்து கொள்ளவும்..
  5. அப்படி பிஷ் பால் இல்லையென்றால் முள் இல்லாத மீன் வாங்கி அதை ஆவியில் வேக வைத்து , அதை நுணுக்கி உருண்டையாக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து கொள்ளுங்கள்
  6. பிறகு அரைக்க வேண்டிய மசாலாவை அரைத்து எடுத்து கொள்ளவும்
  7. பிறகு இருப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் ,, தக்காளி.., உப்பு போட்டு வதக்கி வதங்கியவுடன் அரைத்த மசாலாவை போட்டு வதக்க வேண்டும்
  8. முட்டை கட்லெட் செய்து வைத்ததை எடுத்து போட்டு பின் பிஷ் பால் பொரித்து வைத்ததை எடுத்து போட்டு பிரட்டி கொஞ்ச தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பிரட்டி அல்லவும்.
  9. சுவையான பிஷ் பால் முட்டை கட்ல்ட் பிரட்டல் ரெடி......

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yasmin Shabira
Dec-20-2017
Yasmin Shabira   Dec-20-2017

Anand Ramamorthy
Dec-20-2017
Anand Ramamorthy   Dec-20-2017

Wowww Really good taste

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்