Photo of Arisi maavu thakkadi by Rabia Hamnah at BetterButter
175
2
0.0(1)
0

Arisi maavu thakkadi

Nov-30-2017
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு-1/2 படி
  2. சின்ன வெங்காயம் - 25
  3. வெங்காயம் -3
  4. கறிவேப்பிலை- 2 கொத்து
  5. ப.மிளகாய்-5
  6. துருவிய தேங்காய் -1 1/2
  7. மசாலாவிற்கு:
  8. தலைக்கறி-2
  9. இஞ்சி பூண்டு விழுது-1/2 டேபிள் ஸ்பூன்
  10. வெங்காயம் -1
  11. மசாலா பொடி-4 டேபிள் ஸ்பூன்
  12. மிளகாய் தூள்-2 ஸ்பூன்
  13. எண்ணெய்- தேவைக்கு
  14. உப்பு- தேவைக்கு
  15. கறிவேப்பிலை இலை- கொஞ்சம்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, கறிவேப்பிலையுடன் தாளிக்கவும்.
  2. வெங்காயம் சேர்த்து வதக்கவும். தலைக்கறியை சேர்த்து உப்பு, மிளகாய் தூள், மசாலா பொடி சேர்த்து வதக்கவும். 15 நிமிடம் அப்படியே வேக விடவும்.
  3. தண்ணீர் சேர்த்து வேக விடவும். மூடி போட்டு குறைந்த தணலில் வேக விடவும்.
  4. வேகும் வரை தக்கடி உருண்டைகளை தயார் பன்னவும்.
  5. மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை இலை, தேங்காய், உப்பு சேர்த்து வைக்கவும். இதோடு கொதிக்கும் ஆணம் (குழம்பு) 2 கிளாஸ் மற்றும் தேவைக்கு தண்ணீர் சேர்த்து பிசையவும். 20 நிமிடம் மாவை அப்படியே வைத்து விடவும்.
  6. பின்பு மென்மையான உருண்டைகளாக பிடிக்கவும். அழுத்தி பிடிக்க கூடாது. இப்படி எல்லா மாவையும் பிடித்து வைக்கவும்
  7. இப்பொழுது கொதித்து கொண்டிருக்கும் ஆணத்தில் கவனமாக உருண்டைகளை போடவும். 10 நிமிடம் கழித்து சிம்மில் வைத்து விடவும். இப்பொழுது பிரட்டி விட்டு மீன்டும் 30 நிமிடம் வேக விட்டு இறக்கவும். சுவையான பாரம்பரிய தக்கடி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Juvaireya R
Dec-01-2017
Juvaireya R   Dec-01-2017

திக்கிடி wow our family traditional dish

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்