வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி பிரியாணி- கிராமத்து முறை

Photo of Village style country chicken biryani by Subashini Krish at BetterButter
0
6
0(0)
0

நாட்டுக்கோழி பிரியாணி- கிராமத்து முறை

Dec-01-2017
Subashini Krish
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி பிரியாணி- கிராமத்து முறை செய்முறை பற்றி

இது என் பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்ட முறை. பள்ளி விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்லும் போது மேய்ந்து கொண்டு இருக்கும் கோழியைப் பிடித்து பக்குவமாக செய்து விடுவார்கள்.அதுவும் விறகடுப்பில் கனமான பாத்திரத்தில் எளிதில் செய்து விடுவார்கள். நான் அந்த சுவையை பிரெஷர் குக்கர் கொண்டு செய்ய முயற்சித்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • ప్రెజర్ కుక్
 • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. நாட்டுக்கோழி 1 கிலோ
 2. சீரக சம்பா அரிசி 1 கிலோ
 3. பெரிய வெங்காயம் 1/4 கிலோ நீளமாக நறுக்கியது
 4. சின்ன வெங்காயம் 1 கைப்பிடி
 5. தக்காளி 3
 6. பச்சை மிளகாய் 8
 7. புதினா 1 சிறிய கட்டு
 8. கொத்தமல்லி 1 சிறிய கட்டு
 9. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
 10. தேங்காய் துருவல் 1 கைப்பிடி
 11. முந்திரி 5
 12. பட்டை, கிராம்பு,ஏலம் தலா 3
 13. சோம்பு 1 ஸ்பூன்
 14. இஞ்சி 2 அங்குலம்
 15. பூண்டு 10-15 பல்
 16. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
 17. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
 18. உப்பு தேவைக்கேற்ப
 19. கடலை எண்ணெய் 150 மில்லி

வழிமுறைகள்

 1. தேங்காய், சின்ன வெங்காயம்,3 பச்சை மிளகாய், முந்திரி,ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி, பட்டை,கிராம்பு, சோம்பு, ஏலம் சேர்த்து விழுதாக அரைக்கவும்
 2. சீரக சம்பா அரிசி நன்கு கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
 3. குக்கரில் 100 மில்லி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
 4. கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி ,கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
 5. அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
 6. சுத்தம் செய்த கோழி, உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
 7. 200 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி 5 விசில் விடவும். நாட்டுக்கோழி வேக சற்று நேரம் எடுக்கும்.
 8. குக்கர் விசில் அடங்கியதும் திறந்து 1 பங்கு அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
 9. ஊறிய அரிசியை போட்டு ஒரு கொதி வந்ததும் மீதமுள்ள எண்ணையை ஊற்றி கிளறி 2 விசில் மட்டும் விடவும்
 10. விசில் அடங்கியதும் அரிசி உடையாமல் கிளறி தயிர் பச்சடி உடன் சூடாக பரிமாறவும்.
 11. கிராமத்து பிரியாணி தயார்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்