வீடு / சமையல் குறிப்பு / மீன் அன்னம் /தேங்காய் பாலுடன் மீன் குழம்பு

Photo of Meen Aanam / Fish Curry With Coconut Milk by Prachi Pawar at BetterButter
3313
47
4.5(0)
0

மீன் அன்னம் /தேங்காய் பாலுடன் மீன் குழம்பு

Jul-23-2015
Prachi Pawar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன்-450 கிராம் சுத்தப்படுத்தப்பட்டது
  2. தாளிப்புக்கு/ தட்காவுக்கு:
  3. வெந்தைய விதைகள்- 1/2 தேக்கரண்டி
  4. கரிவேப்பிலை இலைகள்-2 சுருள்
  5. வெங்காயம் -4 நறுக்கப்பட்டது
  6. பூண்டு பற்கள்-4 நசுக்கப்பட்டது
  7. நல்லெண்ணெய்- 2 - 3 தேக்கரண்டி [சூரியகாந்தி எண்ணெயையும் நீங்கள் பயன்படுத்தலாம்]
  8. குழம்பின் அடிப்படைக்கு:
  9. புளி சாறு- 1/4 கப்
  10. தண்ணீர் -2 கப்
  11. வெங்காயம்-10-12 நறுக்கப்பட்டது
  12. கொத்தமல்லி தழை- ஒரு கைப்படி அளவு
  13. பச்சை மிளகாய் 2 பாதியாக பிளக்கப்பட்டது
  14. தக்காளி -2 நடுத்தர அளவினது
  15. காஷ்மீரத்து மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  16. குழம்பு மிளகாய்த்தூள் (குழம்புத்தூள்) - முழுமையாகக் குவிக்கப்பட்டு 3 தேக்கரண்டி
  17. அரைக்க:
  18. புதிய தேங்காய் - 1/2 கப் திருகப்பட்டது
  19. வறுத்த வெட்டிவேர் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தண்ணீரில் மஞ்சள் சேர்த்து நன்றாக கழுவி சுத்தப்படுத்தசுத்தப்படுத்தவும். இது மீனிலிருந்து கவிச்சை வாடையை நீக்க உதவும்.
  2. புளித் தண்ணீரையும் தக்காளியையும் (பாதியாக வெட்டி) சேர்த்து உங்கள் கைகளால் பிசையவும். பச்சை மிளகாயுடன் சில வெங்காயத்தையும் சேர்க்கவும்.
  3. இவற்றோடு சிவப்பு மிளகாய், குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும். போதுமானத் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  4. கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, வெந்தயம், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். மேலே தயாரிக்கப்பட்ட கலவையை சேர்த்து அதை கொதிக்கவிடவும்.
  5. இது கொதிக்க ஆரம்பித்ததும், சுத்தப்படுத்திய மீனை மெதுவாக போட்டு ஒரு முறை கலக்கவும். நடுத்தரத் தீயில் மூடியிட்டு சமைக்கவும்.
  6. ஒரு ஜாரில் தேங்காய், வறுத்த கசகசாவைச் சேர்த்து மிருதுவான சாந்தாக கொஞ்சம் தண்ணீர் விட்டு அறைத்துக்கொள்ளவும். இதை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. மீன் நன்றாக வெந்ததும் மேற்கூறியபடி தயாரிக்கப்பட்ட சாந்தும் சேர்த்து மெதுவாக கலக்கவும். கொஞ்சம் கொதிநிலைக்குக் கொண்டுவரவும்.
  8. தேங்காய்ப்பாலை அல்லது சாந்தைச் சேர்த்ததும் குழம்பை அதிகம் கொதிக்கவிடவேண்டாம். அப்படிச்செய்வது மீன் சுவையைக் கெடுத்துவிடும். கவனமாகச் செய்யவும்.
  9. மீன் முழுமையாக வெந்ததும், உப்பு சேர்த்து புத்தம்புதிய கொத்துமல்லியால் அழகுபடுத்தி தீயை நிறுத்தவும்.
  10. சூடான சாதம், ரசம், பொறியல் ஏதாவது, வறுத்த மீன் மற்றும் பப்படத்தோடு பரிமாறுவது ருசியாக இருக்கும்.
  11. குறிப்பு: மீண்டும் சூடாக்கி மறுநாள் சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்! இட்லி, தோசை, அரிசி மாவு ரொட்டி மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துக்கொள்வது மிகச் சிறப்பானதாக இருக்கும். ஓ! உப்மாவும் யம்மியாக இருக்கும்!! [ஏற்கனவே எச்சிலூறுது]

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்