வெள்ளையப்பம் | Vellaiappam in Tamil

எழுதியவர் Sowmya Sundar  |  1st Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Vellaiappam by Sowmya Sundar at BetterButter
வெள்ளையப்பம்Sowmya Sundar
  • ஆயத்த நேரம்

    3

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

4

0

வெள்ளையப்பம் recipe

வெள்ளையப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vellaiappam in Tamil )

  • பச்சரிசி- 1 கப்
  • புழுங்கலரிசி - 1/2 கப்
  • உளுந்து- 1/4 கப்
  • இஞ்சி- 1 துண்டு
  • பச்சை மிளகாய்- 2
  • பொடியாக நறுக்கிய தேங்காய்- 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை சிறிது
  • பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்
  • மிளகு- 1 டீஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய் -பொரிக்க

வெள்ளையப்பம் செய்வது எப்படி | How to make Vellaiappam in Tamil

  1. அரிசி உளுந்தை களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்
  3. பிறகு பச்சை மிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை, தேங்காய்,பெருங்காயம், மிளகு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு கரண்டியால் அப்பமாக விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும் .

எனது டிப்:

சிறிது புளிப்பாக இருக்க விரும்பினால் மாவை அரைத்து சிறிது நேரம் கழித்து அப்பம் செய்யலாம்

Reviews for Vellaiappam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.

ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்