Photo of KICHADI by Munsila Fathima at BetterButter
770
3
0.0(0)
0

கிச்சடி

Dec-01-2017
Munsila Fathima
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிச்சடி செய்முறை பற்றி

பொதுவாக புக் படிப்பது, வீடியோ பார்ப்பது வழக்கம் அப்படி கத்துக்கிட்டு சாதம் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசுமதி(அ)சீரக சம்பா அரிசி - 150gm
  2. பாசி பருப்பு - 100gm
  3. நெய் - 4-5 தேக்கரண்டி
  4. பட்டை, கிராம்பு , பிரியாணி இலை- சிறிது
  5. உருளை கிழங்கு -1
  6. வெங்காயம் - 1
  7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் - 1தேக்கரண்டி
  9. பச்சை மிளகாய் - 2
  10. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  11. தண்ணீர் - 2 -21/2
  12. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் சிறிது ஊற்றி உருளை கிழங்கை பொரித்து எடுங்கள். விருப்பப்பட்டால் கேரட், பட்டாணி அல்லது வேறு காய்கறிகள் கூட சேர்த்து கொள்ளுங்கள்.
  2. அரிசி, பருப்பை தனி தனியாக ஊற வைத்து கொள்ளுங்கள்.
  3. பொரித்த கிழங்கை எடுத்து வையுங்கள்.
  4. வாணலியில் நெய் ஊற்றி பட்டை , கிராம்பு, பிரியாணி இலை போட்டு சற்று வறுக்கவும்.
  5. அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிவர வறுக்கவும்.
  6. வெங்காயம் சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. வதங்கிய பின் அரிசி, பாசி பருப்பு சேர்த்து ,உப்பு, மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.
  8. அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  9. முக்கால் பாகம் வெந்ததும் பொரித்த கிழங்கை சேர்த்து வேக விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்