டோனட்டுகள் | Doughnuts/Donuts in Tamil

எழுதியவர் Salma Godil  |  20th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Doughnuts/Donuts recipe in Tamil,டோனட்டுகள், Salma Godil
டோனட்டுகள்Salma Godil
  • ஆயத்த நேரம்

    2

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

960

0

டோனட்டுகள் recipe

டோனட்டுகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Doughnuts/Donuts in Tamil )

  • 2 கப் மைதா, மாவு ஒட்டினால் சற்றுக் கூடுதலாக எடுத்துக்கொள்ளவும்.
  • 2 தேக்கரண்டி ஈஸ்ட்
  • 3 தேக்கரண்டி சர்க்கரை குருணை
  • 100 மிலி முழு பால் (வெதுவெதுப்பாகும்வரை சூடுபடுத்தவும்)
  • 25 கிராம் உப்பிடப்படாத வெண்ணெய், உருக்கியது
  • 1/4 தேக்கரண்டி உப்பு

டோனட்டுகள் செய்வது எப்படி | How to make Doughnuts/Donuts in Tamil

  1. ஒரு சிறிய கிண்ணத்தில் சூடானப் பாலைச் சேர்த்து 1 தேக்கரண்டி சர்க்கரையையும் ஈஸ்டையும் அதன் மீது தூவவும். ஈஸ் நொதிப்பதற்கு தோராயமாக 5 நிமிங்கள் அல்லது நுரைபொங்கும்வரை அனுமதிக்கவும்.
  2. ஒரு கிண்ணம் கலந்த கலவையில் சர்க்கரை, முட்டைகள், உப்பு, உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றை கைகளால் கலந்துகொள்க. ஈஸ்ட் கலவையைச் சேர்த்து அதனுடன் கலக்கவும். அதிகமாக மாவைச் சேர்க்கவும், ஒட்டுவதுபோல் இருந்தால்.
  3. 10 நிமிடங்களுக்கு பிசையவும்.
  4. மாவை எண்ணெய் தடவியக் கிண்ணத்தில் வைத்து, ஒரு மூடியால் மூடி வெப்பமான இடத்தில் இரட்டிப்பாகுவதற்கு வைக்கவும் (இது 2ல் இருந்து 3 மணி நேரம் ஆகலாம்)
  5. மாவை மாவு தூவப்பட்ட இடத்தில் வைத்து, குத்தி 1/2 இன்ச் மொத்தத்திற்கு உருட்டிக்கொள்ளவும்.
  6. டோனட் கட்டரைக் கொண்டு உங்கள் டோனட்டுகளை வெட்டி உங்கள் பேக்கிங் ஷீட்டில் வைத்து இரண்டொரு இன்சுகள் இடைவெளிவிட்டு வைத்து அவற்றை ஒரு துண்டினால் மூடி ஒரு வெப்பமான இடத்தில் கிட்டத்தட்ட அரைமணிநேரம் அல்லது இரட்டிப்பாகும்வரை அனுமதிக்கவும்.
  7. மாவு உப்பியதும், மெதுவாக சூடான எண்ணெயில் விட்டு கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் ஒவ்வொரு பக்கமும் அல்லது உப்பி பொன்னிறமாகும்வரை வறுக்கவும். சூடான எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு பேப்பிர் துண்டில் கூடுதல் எண்ணெய் வடிகட்டுவதற்காக வைக்கவும்.
  8. சூடான டோனட்டுகளை சர்க்கரையால் பூசி ஆறவிடவும். சக்லேட்டால் அல்லது ஸ்ட்ராபெர்ரி சாசினாலும் பூசலாம்.

எனது டிப்:

எப்போதும் டோனட் செய்யும்போது பொறுமையாகாத்து, உப்புவதற்கு நல்ல நேரம் கொடுக்கவும். நான் மாவை எனது ஓவனில் வைத்தேன், உப்புவதற்கு ஒரு சூடான இடத்தில் அது இருக்கவேண்டும் என்பதற்காக.

Reviews for Doughnuts/Donuts in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.