Photo of Thattai by neela karthik at BetterButter
781
2
0.0(0)
0

தட்டை

Dec-02-2017
neela karthik
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தட்டை செய்முறை பற்றி

மொறுமொறுப்பான ஒரு டீ டைம் ஸ்நாக்ஸ் ரெசிபி தட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி மாவு: 1 கப்
  2. கடலை பருப்பு அல்லது பொட்டுகடலை: 1 ஸ்பூன்
  3. எண்ணெய்: பொரிப்பதற்கு
  4. உப்பு: தேவைக்கேற்ப
  5. மிளகாய் தூள்: 1/2 ஸ்பூன்
  6. உளுத்தம் பருப்பு மாவு: 1ஸ்பூன்
  7. பிளாஸ்டிக் ஸீட் அல்லது வாழை இலை சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. முதலில் பச்சரியை 1/2 மணி நேரம் ஊற வைத்து பின் காய வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை சலித்து கொள்ள வேண்டும்.
  2. கடலை பருப்பு பயன்படுத்தினால் 1/2 மணி நேரம் முன்பாக ஊற வைத்து விட வேண்டும்.
  3. பாத்திரத்தில் அரிசி மாவு,உளுந்து மாவு,உப்பு,மிளகாய் தூள்,ஊற வைத்த க.பருப்பு அனைத்தையும் கலந்து கொள்ளவும்.
  4. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போன்று பிசையவும்.
  5. பின்னர் அவற்றை சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  6. ஸீட்டில் எண்ணெய் தடவி உருண்டையை வைத்து உடையாமல் மெதுவாக அழுத்தவும்.கிண்ணம் வைத்து அழுத்தினால் சீரான வடிவம் வரும்.
  7. அதில் போர்க் கொண்டு 2 3 துளை இடவும்.
  8. மாவு உள்ளே நன்றாக வேக இப்படி செய்யலாம்.
  9. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தீயை குறைத்து ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
  10. அவ்வ பொழுது திருப்பி போட்டு வேக வைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
  11. மொறுமொறுப்பான தட்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்