பன்னீர் சோள மசாலா | Paneer BabyCorn Masala in Tamil

எழுதியவர் Salma Godil  |  20th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Paneer BabyCorn Masala recipe in Tamil,பன்னீர் சோள மசாலா, Salma Godil
பன்னீர் சோள மசாலாSalma Godil
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

3317

0

பன்னீர் சோள மசாலா recipe

பன்னீர் சோள மசாலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer BabyCorn Masala in Tamil )

 • பன்னீர் கட்டிகள் - 200 கிராம்
 • இளம் சோளம் - 6-8
 • வெங்காயம் - 1 ( நன்கு வெட்டியது)
 • தக்காளி - 2 ( நன்றாக வெட்டியது)
 • மிளகாய்த்தூள் - 1 டீக்கரண்டி
 • கொத்தமல்லித் தூள் - 1 டீக்கரண்டி
 • மஞ்சள்தூள் - 1/4 டீக்கரண்டி
 • சுவைக்கேற்ப உப்பு
 • முந்திரி பருப்பு - 2 டீக்கரண்டி
 • வெந்தய கீரை பொடிசெய்தது - 1 டீக்கரண்டி
 • கரம் மசாலாத் தூள் - 1/2 டீக்கரண்டி
 • ஏலக்காய்த் தூள் - 1/4 டீக்கரண்டி
 • கீரிம் - 1/4 கப்
 • கிட்சன் கிங் மசாலா - 2 டீக்கரண்டி
 • கொத்தமல்லி இலை - 1 டீக்கரண்டி
 • வெண்ணெய் - 2 டீக்கரண்டி
 • எண்ணெய் - 2 டீக்கரண்டி
 • தண்ணீர் - 1/2 கப்

பன்னீர் சோள மசாலா செய்வது எப்படி | How to make Paneer BabyCorn Masala in Tamil

 1. இளஞ்சோளத்தை 5 நிமிடம் லேசாக கொதிக்கவிட்டு வெட்டி தனியாக வைத்துகொள்ளவும்.
 2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுசெய்யாவும். வெங்காயம், முந்திரி பருப்பு மற்றும் தக்காளி சேர்த்துகொள்ளவும் மற்றும் தக்காளியை மென்மையாகும் வரை வதக்கவும்.
 3. இப்போது மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலா எண்ணெய்யை விட்டு வரும் வரை வேகவிடவும் வேண்டும்.
 4. கலவையை ஆறவைத்து பிறகு தண்ணீரை சேர்த்து மென்மையான விழுதுப் போன்று ஆகும் வரை அதை அரைக்கவும்.
 5. வெண்ணெய்யை சூடுசெய்து அதில் வெந்தய கீரை, அரைத்த மசாலா, கரம் மசாலாத் தூள், ஏலக்காய்த் தூள், கிட்சன் கிங் மசாலா மற்றும் கீரிம் சேர்த்துக்கொள்ளவும். பின் 2 நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.
 6. கடைசியாக பன்னீர் கட்டிகள் மற்றும் இளஞ்சோள துண்டுகள் சேர்த்துக்கொள்ளவும். 5-10 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும். தேவையென்றால் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
 7. இளஞ்சோளம் மற்றும் கொத்தமல்லிக் கொண்டு அலங்கரித்து சூடாக புரோட்டவுடன் பரிமாறவும்.

எனது டிப்:

நான் ஏற்கனவே குழம்பை தயார் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளேன், எனவே இந்த உணவை சில நிமிடங்களில் மிகவும் எளிதாக தயார் செய்யலாம்.நீங்கள் உறைந்த அல்லது கேனில் அடைக்கப்பட்ட இளஞ்சோளம் பயன்படுத்தி இருந்தால் அவற்றுக்கு லேசாக கூட கொதிக்க தேவையில்லை. |

Reviews for Paneer BabyCorn Masala in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.